சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது 10 பிரான்ஸ் போர் விமானங்கள் குண்டு வீச்சு…!!

Read Time:3 Minute, 16 Second

8c31ae93-4f5e-4f3c-a7fd-e6ab3509f51e_S_secvpfபிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 13–ந் தேதி ஐ.எஸ்.தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 129 பேரை கொன்றனர். 352 பேர் காயம் அடைந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது பிரான்ஸ் போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.

சிரியாவில் ஐ.எஸ்.தீவிர வாதிகளின் தலைமையிடமான ரக்காவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. 15–ந் தேதி தாக்குதல் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று 3–வது நாளாக தொடர்ந்து குண்டு வீச்சு நடத்தப்பட்டது. அதில் 10 பேர் விமானங்கள் ஈடுபட்டன. அப்போது ரக்காவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கமாண்ட் மையம் மற்றும் பயிற்சி மையங்கள் மீது 20 குண்டுகள் வீசப்பட்டன.

அதில், அவை அழிக்கப்பட்டதாக பிரான்ஸ் ராணுவ மந்திரி தெரிவித்துள்ளார். மத்திய தரைக்கடலில் சார்லஸ் டி கவுல் என்ற விமானம் தாங்கி கப்பலில் இருந்து போர் விமானங்கள் நாளையும் பறந்து சென்று குண்டு வீசும். ரக்கா மற்றும் டெர் எஸ்கோர் ஆகிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

சமீபத்தில் எகிப்தில் சினாய் தீபகற்பத்தில் ரஷிய பயணிகள் விமானத்தை ஐ.எஸ்.தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்தனர். அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ரஷியாவும் தீவிரவாதிகள் மீது அதிரடி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

ரக்கா நகரம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த ரஷியா திட்டமிட்டுள்ளது. ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது கூட்டணி நாடுகள் மிகப்பெரிய தாக்குதலை நடத்த வேண்டும் என பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டே கோரிக்கை விடுத்துள்ளார். அதை ஏற்று பிரான்சுடன் ரஷியா மற்றும் அமெரிக்காவும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன.

பாரீசில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பெல்ஜியத்தை சேர்ந்த அப்துல் ஹமீத் அபாட் (27) என்ற தீவிரவாதி மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. தற்போது அவன் சிரியாவுக்கு தப்பி விட்டான்.

எனவே, அவனை குண்டு வீசி கொல்ல மேற்கத்திய நாடுகள் தீவிரமாக உள்ளன. அங்கு அவன் பதுங்கியிருக்கும் இடத்தை அறிந்து குண்டு வீச்சு நடத்தி வருகின்றன. தற்போது அவனது நிலை குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 17 பேரை சுட்டுக்கொன்ற சீன பாதுகாப்பு படை…!!
Next post முதன்முறையாக விண்வெளியில் பூச்செடி வளர்க்கும் நாசா மையம்…!!