ஈராக்கில் அமெரிக்க ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது; 2 வீரர்கள் பலி; 12 பேர் காயம்
ஈராக்கில், தலைநகர் பாக்தாத்துக்கு அருகே உள்ள சல்மான் பாக் என்ற இடத்தில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. தீவிரவாதிகள் தாக்கியதால் இது வீழ்த்தப்படவில்லை என்பது மட்டும் உறுதி என்று அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் 2 ராணுவ வீரர்கள் பலியானார்கள். 12 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்துக்கு காரணம் என்ன என்பது பற்றி விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் கூறினார்கள். இந்த ஹெலிகாப்டர் ராணுவ வீரர்களை ஈராக்கின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த சம்பவத்தின்போது ஹெலிகாப்டரில் எத்தனைபேர் இருந்தார்கள் என்பது தெரியவில்லை. ஈராக்கில் அமெரிக்க தாக்குதல் தொடங்கியது முதல், 70 அமெரிக்க ஹெலிகாப்டர்கள் விழுந்து நொறுங்கின. ஈராக்கில் இதுவரை நடந்த போரில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 3,863 பேர் பலியாகி இருக்கிறார்கள். இந்த ஆண்டு மட்டும் இதுவரை 863 அமெரிக்க வீரர்கள் பலியாகி உள்ளனர். ஈராக்கில் இதுவரை நடந்த ஹெலிகாப்டர் விபத்துக்களில் கடந்த 2003-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த விபத்து தான் உயிர்ப்பலியை அதிகம் வாங்கியது. 2 ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதியதில் 17பேர் பலியானார்கள்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...