ஓவியத்தில் லயித்து முத்தமிட்ட பெண் நீதிபதி : அபராதம் விதித்து தண்டித்ததால் பரபரப்பு

Read Time:2 Minute, 57 Second

ஓவியத்தில் லயித்துப்போய், லிப்ஸ்டிக் உதட்டால் முத்தமிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பெண் நீதிபதிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கம்போடியா நாட்டில் மூல் பகுதியைச் சேர்ந்தவர் ரிடிசைம்(30). பெண் நீதிபதி. ஓவியம் வரைவதுடன ரசிப்பதில் ஆர்வம் உள்ளவர். இவர் பிரான்ஸ் நாட்டில் எலிகாம் நகரில் நடந்த ஓவியக் கண்காட்சிக்குச் சென்றார். பல நாட்டு ஓவியர்களும் ஓவியங்களை காட்சியாக வைத்திருந்தனர். அவற்றை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அமெரிக்க ஓவியர் சாய்டாம்லே வரைந்து வைத்திருந்த கேன்வாஸ் ஓவியத்தைப் பார்த்ததும் அப்படியே நிலைகுத்தி நின்றுவிட்டார். ஓவியத்தில் லயித்துப் போன பெண், ஓவியத்தை முத்தமிட்டுவிட்டார். கண்காட்சி நடத்தியவர்கள் அதிர்ந்து போனார்கள். லிப்ஸ்டிக் போட்ட உதட்டால் முத்தமிட்டதிõல் ஓவியம் களங்கப்படுத்தப்பட்டுவிட்டது என்று குற்றம் சாட்டினர். இதற்காக அவர் அபராதம் செலுத்த வேண்டும் என்று கண்காட்சி அமைப்பாளரும் ஓவியர்களும் வற்புறுத்தினர். ரசிகையின் லயிப்பு குற்றமாக மதிப்பிடப்பட்டு 500 யூரோ டாலர் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இந்திய நாணய மதிப்பில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய். வேறு வழியின்றி அபராதத்தை அவர் செலுத்திவிட்டார். டாம்லே என்ற ஓவியரின் ஓவியத்தை அவர், லிப்ஸ்டிக் போட்ட உதட்டுடன் முத்தம் கொடுத்துள்ளார். இதனால் அவர் மேல் வழக்கு தொடரப்பட்டது. லிப்ஸ்டிக் உதட்டால் முத்தமிட்ட ஓவியம். மூன்று மீட்டர் நிளமும், இரண்டு மீட்டர் அகலமும் கொண்டது. சந்தை விலை இரண்டு மில்லியன் யூரோ. இந்திய நாணய மதிப்பில் 11 கோடி ரூபாய். அபராதம் செலுத்தியது பற்றி பெண் ரிடிசைம் கூறியிருப்பதாவது: ஓவியத்தில் மிகுந்த நாட்டம் உண்டு. இந்த ஓவியத்தில் லயித்துவிட்டேன். என் உணர்வை வெளிப்படுத்த முத்தம் கொடுத்துவிட்டேன். விவகாரம் இந்த அளவுக்கு தீவிரமடையும் என்று நினைக்கவில்லை. இவ்வாறு ரிடிசைம் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த அரசு ஊழியர் கைது
Next post பிரித்தானியாவில் தடுப்புக் காவலில் இருந்த புலிகளின் இலண்டன் பொறுப்பாளர் சாந்தன் பிணையில் விடுதலை