நல்லூர் ஆலய வீதியில் யாழ். மாநகர சபையின் அறிவித்தலை நிராகரித்த பொதுமக்கள்… (என்ன கொடுமை இது?)…!!

Read Time:2 Minute, 22 Second

DSC_0916வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த கந்த சஷ்டி உற்சவகாலத்தை முன்னிட்டு சுவாமி வீதியுலா மற்றும் சூர சம்கார நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதால் இன்று 12 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 18 ஆம் திகதி புதன்கிழமை வரை நல்லூர்க் கந்தசுவாமி ஆலய சூழலினூடான வாகனப் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர சபையின் ஆணையாளர் பொ-வாகீசன் தெரிவித்திருந்தமை நீங்கள் அறிந்ததே.

அதாவது இன்றுமுதல் 12 , 13, 14, 15, 18 ஆம் திகதிகளில் பிற்பகல்-4 மணி முதல் பிற்பகல்-7 மணி வரையும் 16 ஆம் 17 ஆம் திகதிகளில் நண்பகல்-12 மணி முதல் பிற்பகல் -7 மணி வரையும் வீதி மூடப்பட்டிருக்குமெனவும் வாகனச் சாரதிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தி ஆலயச் சூழலில் அமைதியைப் பேணுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் ஆணையாளர் மேலும் கேட்டு இருந்தார்.

இருப்பினும் சற்றுமுன்னர் “அதிரடி” இணையத்துக்கு கிடைத்த தகவலின்படி யாழ். மாநகர சபையின் அறிவித்தலை உதாசீனம் செய்த பொதுமக்கள் சிலர், கந்தசஷ்டி உற்சவம் ஆரம்பமாகிய இன்று மதியம் முதல் தற்போது வரை தமது கனரக வாகனங்களுடன் உள்ளே சென்று தரித்து இருந்ததை காணக் கூடியதாக இருந்தது. யாழ். மாநகர சபையால் வாகனத் தடுப்புகள் போடப்பட்டு இருந்த போதிலும், அதனை தள்ளி வைத்து விட்டு உள்ளே சென்றதைக் காணக் கூடியதாக இருந்தது.

இதனை புகைப்பட ஆதரங்களுடன் “அதிரடி” இணையம் பகிரங்கப்படுத்தி உள்ளது. ஆகவே சம்பந்தப்பட்டவர்களான நல்லூர் கோவில் நிர்வாகம், யாழ்.மாநகர சபை, யாழ். பொலிசார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்களென நம்புகிறோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சென்னையில்.. அன்ரன் பாலசிங்கம் வீட்டுக்கு குண்டு வைப்பு!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 49) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”…!!
Next post தரமான உலக பல்கலைக் கழகங்கள் பட்டியல்: இந்திய பல்கலைக்கழகம் சாதனை..!!