அப்பாக்களின் பராமரிப்பில் வளரும் குழந்தைகளின் எதிர்காலம் பாழ்?

Read Time:2 Minute, 9 Second

anichildwakeup.gif“அப்பாக்களின் பராமரிப்பில் வளரும் குழந்தைகளின் எதிர்காலம் பாழாகும் நிலை ஏற்படக்கூடும்” என்று, ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. அம்மாக்கள் வேலைக்குச் செல்வதால் ஏற்படும் பாதிப்பை அறிய பிரிட்டனில் உள்ள பிரிஸ்டோல் பல்கலைக் கழகம் ஆராய்ச்சியில் ஈடுபட்டது. இந்த ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளதாவது:பாரம்பரிய வழக்கங்களை பெற்றோர் மாற்றிக் கொள்வதால், குழந்தைகளின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது. பொருளாதார தேவை உட்பட பல காரணங்களுக்காக இப்போது அம்மாக்கள் வேலைக்குச் செல்கின்றனர். இது, குழந்தைகளின் வளர்ச்சியை பெரிதும் பாதிக்கிறது. அதிக நம்பிக்கையுடன், சாதுர்யத்துடன் குழந்தைகளை வளர்ப்பது பெண்கள் தான். இவர்கள் வேலைக்குச் செல்வதால், குழந்தைகளிடையே, அதிகளவில் உணர்வு பாதிப்பு ஏற்படுகிறது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அசதியாலும், படபடப்பாலும் தங்கள் குழந்தைகளின் தேவைகளை கவனிப்பது குறைந்து போகிறது. பல வீடுகளில் குழந்தைகளை அப்பாக்கள் பராமரிக்கின்றனர். ஆனால், அவர்களால் வளர்க்கப்படும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. பள்ளியில் சேர்ப்பதற்காக நடத்தப்படும் திறனறி தேர்வில் தேர்ச்சி பெறுவதே இல்லை. சுறுசுறுப்பின்றி காணப்படுகின்றனர். ஆனால், இப்படி இருப்பது ஆண் குழந்தைகள் தான்; பெண் குழந்தைகள் அல்ல.இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post 23 விடுதலைப்புலிகள் பலி; இலங்கையில் ராணுவம் தீவிர தாக்குதல்
Next post ஆசியாவின் கவர்ச்சிகரமான ஆண், நடிகர் ஷாருக்கான்: இங்கிலாந்து பத்திரிகை கணிப்பு