கனடாவில் பெரும் தீ விபத்து: ஒரே நாளில் 3வது முறையாக நெருப்பு பற்றியதால் சந்தேகம்..!!

Read Time:2 Minute, 1 Second

lasalle_arsonfire_002கனடாவின் லசல்லே பகுதியில் அமைந்துள்ள இரட்டை குடியிருப்பில் தொடர்ந்து 3வது முறையாக தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து பொலிசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.
லசல்லே பகுதியின் Edouard தெருவில் அமைந்துள்ள இந்த இரட்டை குடியிருப்பின் இரண்டாவது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் இருந்து கரும்புகை எழுவதை அறிந்த அப்பகுதியினர் உடனடியாக மீட்புப்படையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர கடுமையாக போராடியுள்ளனர்.

40 தீயணைப்பு வீரர்கள் ஒன்றிணைந்து போராடியதின் காரணமாக ஒரு மணி நேரத்தில் நெருப்பு கட்டுக்குள் வந்துள்ளது.

தீ விபத்தினால் கூரை மற்றும் இரண்டாவது தளம் கடுமையாக சேதமடைந்துள்ளது. சேத மதிப்பு ஒரு லட்சம் டொலர்கள் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் சிக்கி காயங்கள் எதுவும் இன்றி தப்பிய இரண்டு பேரை மீட்புப்படையினர் மீட்டுள்ளனர்,

கடந்த 24 மணி நேரத்தில் இந்த குடியிருப்பில் இது 3வது முறையாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இந்த தொடர் விபத்து குறித்து Montreal சிறப்பு பொலிசார் விசாரணை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தையுடன் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி: காரணம் என்ன?
Next post விரட்டி விரட்டி பாலியல் தொந்தரவு செய்த பெண்கள்: பயந்து ஓடிய நபர் (வீடியோ இணைப்பு)…!!