மணிக்கு 200 கிலோ மீற்றர் வேகத்தில் சீறி பாயும் ரோபோக்கள் (வீடியோ இணைப்பு)…!!

Read Time:2 Minute, 48 Second

yamaha_moto_002-615x437மோட்டர் வாகன தயாரப்பில் முன்னணியில் உள்ள யமஹா நிறுவனம் தற்போது வாகனங்களை தாங்களாகவே ஓட்டும் ரோபோக்களை வடிவமைத்துள்ளனர்.

யமஹா என்றவுடன் சாலைகளில் சீறி பாயும் பைக்குகள் தான் நினைவுக்கு வரும்.

அந்த அளவுக்கு பைக் தயாரிப்பில் தனித்த சிறப்புடன் விளங்கும் யமஹா நிறுவனம் தற்போது புதிதாக மோட்டோபோட் (Motobot) என்ற ரோபோவை வடிவமைத்து ஆச்சரியம் அளித்துள்ளது.

ஜப்பானில் கடந்த மாதம் நடைபெற்ற டோக்கிய இயந்திர கண்காட்சியில் ஏராளமான நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களின் திறமையை காட்ட முயற்சி செய்தன.

எனினும் அங்கிருந்தவர்களின் மொத்த கவனத்தையும் பெற்றது இந்த மோட்டோபோட் தான்.

மணிக்கு 200 கிலோமீற்றர் வேகத்தில் பைக்குகளை இயக்கும் திறமை வாய்ந்தவை இந்த ரோபோக்கள் என்று கூறப்படுகிறது.

வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்காக இதை வடிவமைத்துள்ளதாக யமஹா நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் இந்த மோட்டோபோட் பற்றிய முழுமையான தகவல்களை கூறாமல் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது.

இதனிடையே நெடுஞ்சாலையோர ரோந்து பணிகளுக்காகவும், சாலையில் அதிவேகமாக செல்பவர்களை பிடிப்பதற்காகவும் இந்த ரோபோக்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என்ற பேச்சுக்களும் உலாவந்த வண்ணம் உள்ளன.

இந்த மோட்டோபோட் குறித்து யமஹா நிறுவனம் கூறும்போது, இந்த தொழில்நுட்பத்தை வர்த்தகத்தில் புதிய பாதைகளை உருவாக்குவதில் முன்னோடியாக மாற்றபோகிறோம் என்று சூசகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் பைக் பந்தயங்களில் பயன்படுத்துவற்காக இந்த மோட்டோபோட் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தற்போது இந்த ரோபோக்களை முழுமைபடுத்தும் பணிகளில் யமஹா ஈடுபட்டுள்ளது.
ஒரு வேளை வருங்காலங்களில் மனிதர்களுக்கு வாகனம் ஓட்டும் சாரதிகளாக இந்த ரோபோக்கள் பயன்படுத்தப்படலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெற்ற மகளை 4 வருடங்களாக கற்பழித்த தந்தை: ஒழுக்கத்தின் அடிப்படையில் விடுதலை செய்த நீதிமன்றம்…!!
Next post நடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…!!