தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் TRO சர்வதேசத் தலைவரும் அவரது மனைவியும் அமெரிக்காவில் அந்நாட்டுப் பொலிசாரால் கைது

Read Time:1 Minute, 52 Second

aniusa2.gifதமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் (TRO) சர்வதேசத் தலைவர் வினாயகமூர்த்தியும், அவரது மனைவியும் அமெரிக்கப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகளிலுள்ள புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடமும், சர்வதேசத் தொண்டு நிறுவனங்களிடமும் இலங்கைத் தமிழர்களின் புனர்வாழ்வுப் பணிகளுக்கெனப் பெருமளவு நிதியைத் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பெயரால் சேகரித்துப் புலிகளுக்கு ஆயுதக் கொள்வனவிற்கு வழங்கி வந்தமை நிரூபிக்கப்பட்ட நிலையில், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை அமெரிக்கத் திறைசேரி முடக்கியுள்ள நிலையில், தற்போது அக்கழகத்தின் சர்வதேசத் தலைவரான வினாயகமூர்த்தியும் அவரது மனைவியும் அமெரிக்கப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளமை புலிகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சர்வதேசத் தலைவரான வினாயகமூர்த்தி புலிகளது கடற்பிரிவின் ஒரு முக்கிய தலைவரெனக் கருதப்படும் நிலையில் அவர் மூலம் புலிகளது ஆயுதக் கொள்வனவு மற்றும் நிதி சேகரிப்புத் தொடர்பான பல உண்மைகள் அம்பலமாகலாம் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வீட்டில் அடைத்து வைத்து கும்பலால் மனைவி கற்பழிப்பு; வரதட்சணை பணத்துக்காக கணவன் செய்த வெறித்தனம்!!
Next post செல்போனுக்காக ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் கோடி செலவிடும் பாகிஸ்தானியர்கள்