’பெற்றோர்கள் ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொள்ளும் சட்டம் ரத்து’: சீனா அரசு அதிரடி அறிவிப்பு…!!

Read Time:2 Minute, 4 Second

china_rule_001பெற்றோர்கள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய சட்டத்தை உடனடியாக ரத்து செய்யவுள்ளதாக சீனா அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
உலக மக்கள் தொகையில் முதலாவதாக உள்ள சீனா, கடந்த 1979ம் ஆண்டு ஒரு புதிய கொள்கை முடிவுகளை நடைமுறைபடுத்தியது.

இதன் மூலம், சீனாவில் உள்ள பெற்றோர்கள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியிருந்தது.

இதனை மீறி இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் பெற்றோர்களுக்கு தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது. சில நேரங்களில் ‘பலவந்தமாக கருக்கலைப்பிற்கும்’ தாயார்கள் உட்படுத்தப்பட்டனர்.

சுமார் 35 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த இந்த சட்டத்தை ரத்து செய்ய சீனா அரசு முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம், சீனாவில் உள்ள அனைத்து பெற்றோர்களும் சட்டரீதியாக இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாம்.

சர்ச்சைக்குரிய சட்டத்தால் சீனாவில் கடந்த 35 ஆண்டுகளில் 400 மில்லியன் குழந்தைகள் பிறப்பது தடுக்கப்பட்டது.

ஆனால், ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்வதால், அந்நாட்டில் உள்ள பொதுமக்களின் முதுமையினால் எழும் பிரச்சனைகளை தவிர்க்கவே இந்த சட்டத்தை ரத்து செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பணத்துக்காக குழந்தையின் தந்தையை மாற்றிய பெண்: யாழில் சம்பவம்…!!
Next post பேரீச்சம் பழத்தின் நன்மைகள்…!!