பணிப்பெண்களை கற்பழிக்க முயன்று கைதான சவுதி இளவரசர்: அறையில் நடந்தது என்ன?…!!
பணிவிடை செய்யவந்த 3 பெண்களை கற்பழிக்க முயன்றதாக சவுதி இளவரசர் கைதாகி உள்ள நிலையில், அவரது அறையில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சவுதி அரேபிய முன்னாள் மன்னரான அப்துல்லாவின் மூத்த மகன் இளவரசர் மஜட் பின் அப்துல்லா(29).
கடந்த செப்டம்பர் 21ம் திகதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஓய்வெடுப்பதற்காக தன்னுடைய ஆடம்பர பட்டாளங்களுடன் பயணமாகியுள்ளார்.
37 மில்லியன் டொலர் மதிப்புள்ள அந்த மாளிகையில் பணியாற்றிய 3 பெண்களை இயற்கைக்கு எதிராக கற்பழிக்க முயன்ற வழக்கில் செப்டம்பர் 25ம் திகதி பொலிசாரால் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் தற்போது வெளியாகியுள்ளது.
இதில் உள்ள தகவலின் அடிப்படையில், செப்டம்பர் 21ம் திகதி இரவு ஒரு ஆடம்பரமான விருந்து ஒன்றை இளவரசர் ஏற்பாடு செய்திருந்தார்.
விருந்து நிகழ்ச்சியில் கொக்கைன் வகை போதை மருந்தை அதிக அளவில் எடுத்துக்கொண்ட இளவரசர், அவருக்கு கீழ் பணியாற்றிய ஒரு ஆணை கட்டாயப்படுத்தி ஓரிணச்சேர்க்கைக்கு துன்புறுத்தியுள்ளார்.
பின்னர், இளவரசருக்கு பணிவிடை செய்ய வந்த திருமணமாகி குழந்தைகள் பெற்றுள்ள 3 பெண்களிடம் மிகவும் அநாகரீகமாக நடந்துகொண்டுள்ளார்.
மூவரில் ஒரு பெண்ணிடம் ‘இதை விட மிகப்பெரிய ஒரு விருந்தை ஏற்பாடு செய்யப்போகிறேன். அப்போது, நான் என்ன கூறுகிறேனோ, அதனை மறுக்காமல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் கொலை செய்து விடுவேன்’ என மிரட்டியுள்ளார்.
மறுநாள்(செப்டம்பர் 22) இரவு மீண்டும் ஒரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், முந்தைய இரவை விட கொடூரமான காட்சிகள் அரங்கேறியுள்ளன.
ஆணுடன் இளவரசர் ஓரிணச்சேர்க்கையில் ஈடுப்படுவதை 3 பெண்களையும் பார்த்துக்கொண்டு இருக்குமாறு மிரட்டியுள்ளார்.
சிறிது நேரத்திற்கு பிறகு, நிர்வாணமாக இருந்த இளவரசர், 3 பெண்கள் மீதும் சிறுநீர் கழிக்க முயன்றபோது அவரது பிற உதவியாளர்கள் வந்து தடுத்துள்ளனர்.
பின்னர், 3 பெண்களிடமும் இளவரசர் இயற்கைக்கு மாறாக பாலியல் உறவுகொள்ள முயன்றபோது பெண்கள் மூவரும் எதிர்ப்பை காட்டியுள்ளனர்.
அப்போது, ‘நான் ஒரு இளவரசர்….நான் என்ன விரும்புகிறேனோ அதனை செய்வேன்…என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது’ என ஆவேசமாக பேசியவாறு அவர்கள் மீது பாய்ந்துள்ளார்.
இந்த போராட்டத்தில் மீண்டு ரத்த காயங்களுடன் 3 பணிப்பெண்களும் மாளிகையை விட்டு வெளியே ஓடி வந்து பொலிசாரிடம் புகார் அளித்த பிறகு, இளவரசர் மறுநாள் காலை அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
சவுதி அரேபிய சட்டங்களின் படி, அந்நாட்டு பிரஜை ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால், சவுக்கடி, கல்லால் அடிப்பது அல்லது தலையை வெட்டி தண்டனை அளிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
லாஸ் ஏஞ்சல்ஸ் பொலிசாரின் விசாரணைக்கு பிறகு, சுமார் 3 லட்சம் டொலர் பிணையதொகை செலுத்தி தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், இளவரசருக்கு ஒரு வருட சிறை தண்டனையும் 3,000 டொலர் அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating