த்ரில்லாக பயணித்து சொர்க்கத்திற்கு செல்ல வேண்டுமா? (வீடியோ இணைப்பு)…!!

Read Time:4 Minute, 0 Second

haiways_heaven_001ஹவாயில் உள்ள ஆஹூ(Oa’hu) தீவில் உள்ள ஒரு உயரமான மலைத்தொடரில் நடைபாதை ஒன்று அமைந்துள்ளது.

இதில் 3,922 படிக்கட்டுகள் செங்குத்தாக செல்கின்றன.

இந்த மலைப்படிக்கட்டுகள் சொர்க்கத்துக்கான பாதை அல்லது உயரமான படிக்கட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன.

ஆனாலும், இதில் நடப்பது ஆபத்தானதாகவே உள்ளது. இது கூலா மலைத்தொடருடன் பரவி சேர்ந்தே அமைந்துள்ளது.

1942 ம் ஆண்டு முதலே அமெரிக்கா இந்த மலைத்தொடரில் போடப்பட்டிருக்கும் பாதையையும் மலையில் உள்ள ஏதுவான இயற்கை அமைப்பையும் பயன்படுத்திக்கொள்ள ரகசியமாகவே திட்டங்கள் வகுத்து வந்தது.

கடற்படை ஒப்பந்ததாரர்களிடம் ஹைகூ வானொலி நிலையம் அமைக்க திட்டமிட்டது.
பிறகு கடலில் நிற்கும் கடற்படை கப்பல்களுக்கு கரையிலிருந்து சமிக்ஞைகள் பெற இந்த உயரமான மலையில் ஒரு நிலையம் அமைத்து பயன்படுத்திக்கொள்ள விரும்பியது.

இந்த மலையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தாலும் சில இடங்களில் சேதமடைந்து கிடந்தது. அதை சரிசெய்து மரத்தாலான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டது. மலையின் உச்சியிலும் சமிக்ஞைக்கான நிலையங்கள் அமைக்க ஏற்பாடு செய்தனர்.

அந்த மலைகளின் முகடுகளுக்கு இடையே ரோப்கார் அமைக்கப்பட்டது. ரோப்கார் அமைக்கப்பட்டதும் தொழிலாளர்கள் படிகளில் ஏறி மலைக்கு செல்வதைவிட ரோப்காரையே பயன்படுத்த துவங்கினர்.
இந்த வானொலி நிலையம் 1943 ல் தொடங்கப்பட்டது. 1950 ல் அமெரிக்க கடற்படை இதில் நடக்கும் பணியை கைவிட்டது.

பிறகு, மர ஏணிகளை அகற்றிவிட்டு உலோக படிக்கட்டுகளும் அதை ஒட்டி சில இடங்களில் தளங்களும் அமைக்கப்பட்டன.

சேதங்கள் கருதி பொதுமக்கள் இதில் ஏறுவதற்கு 1987 ல் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. பிறகு, அருகே வாழும் மக்களின் மனக்கசப்பு கருதி மீண்டும் திறக்கப்பட்டது.

2003 ம் ஆண்டிலும் 875,000 டொலர் செலவில் மராமத்து பணிகள் செய்யப்பட்டது. தினமும் ஒரு டஜன் பேர்களாவது இதில் ஏறி பெருமையடைவதோடு, அதை வீடியோ எடுத்தும் வலைதளங்களில் பரப்புகின்றனர்.

2012 ம் ஆண்டில் ஒரு துக்கமான நிகழ்வாக ’டான் டிகி’ நிகழ்ச்சி பாடகரும் கொமடியனும் ஆன ஃபிர்ட்ஸ் ஹஸன்புஸ்ச் இந்த த்ரில்லான மலை ஏற்றத்தின் போது மாரடைப்பால் இறந்தது குறிப்பிடத்தக்கது.

அதனால், 2015 யூலை முதல் இந்த மலைப்பாதையின் அடித்தளத்தில் ஒரு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இவ்வளவு பாதிப்பு வரலாறுகளை சந்தித்து வந்த இந்த மலைப்பாதை மீண்டும் 2015 ம் ஆண்டில் காதலர் தின வாரத்தின் கடைசி நாளில் ஏற்பட்ட புயலால் இந்த படிக்கட்டுகள் பெரிய அளவில் சேதமடைந்துள்ளன.

இது இன்னும் சரிசெய்ய வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு திரில்லான அனுபவத்தை பெறவிரும்பும் சுற்றுலா பயணிகளுக்கு இங்கு சென்று வருவது பயனுள்ளதாகவே இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரம்யா கிருஷ்ணனின் அந்தரங்க காட்சிகள்..!!
Next post பந்துல பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்..!!