திருமணத்தை ரத்து செய்த மணமகன்: ஆதரவற்றவர்களுடன் விருந்தை கொண்டாடிய மணப்பெண் வீட்டார் (வீடியோ இணைப்பு)…!!

Read Time:2 Minute, 29 Second

devastated_bride_004கலிபோர்னியா மாகாணத்தில் திருமணம் ஒன்று பாதியில் நின்றதை அடுத்து மணப்பெண் வீட்டார் விமரிசையாக நடத்தயிருந்த விருந்தை ஆதரவற்றவர்களுடன் கொண்டாடியுள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள El Dorado Hills பகுதியில் குடியிருந்து வருபவர் Quinn Duane குடும்பத்தினர்.

இவருக்கு Landon Borup என்பவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திகதியும் குறிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திடீரென Landon Borup தமக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை எனவும், அதானால் திருமணத்தில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் மனமுடைந்துபோன Duane குடும்பத்தினர் தீவிர யோசனைக்கு பின்னர் வித்தியாசமான ஒரு முடிவுக்கு வந்தனர்.

Duane மற்றும் Borup திருமணத்தை முன்னிட்டு ஆடம்பரமான Citizen ஹொட்டலில் 35 ஆயிரம் மதிப்பிலான விருந்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

அந்த பகட்டான ஆடம்பர விருந்தை ஆதரவற்றவர்கள் மற்றும் வீடிழந்தவர்களுடன் கொண்டாட Duane குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதியில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு நேற்றைய தினம் இந்த விருந்து சிறப்பாக நடைபெற்றுள்ளது.

2011-ம் ஆண்டில் இருந்தே பழகிவந்த Duane மற்றும் Borup ஆகியோர் கடந்த ஆண்டு நடைபெற்ற குடும்ப விழா ஒன்றில் திருமணம் செய்துகொள்வதாக முடிவெடுத்துள்ளனர்.

தற்போது இந்த திருமணம் முடிவுக்கு வந்ததுள்ளது Duane குடும்பத்தினருக்கு கடும் மனவருத்தத்தை அளித்திருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

திருமணம் முறிந்ததன் காரணத்தை இருதரப்பினரும் இதுவரை வெளியிடவில்லை எனபது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிர்ச்சியில் அமெரிக்கா: காரணம் என்ன…?
Next post ஆபாசமாக உடை அணிந்திருந்ததாக கூறி பெண்களை சுற்றிவளைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் (வீடியோ இணைப்பு)…!!