அதிர்ச்சியில் அமெரிக்கா: காரணம் என்ன…?

Read Time:1 Minute, 42 Second

udf16_002அமெரிக்காவின் அதிநவீன எப் 16 போர் விமானத்தை தலிபான் தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியுள்ளது அமெரிக்க இராணுவ படையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பாக்தியாக மாகாணத்தில் உள்ள சயித் கரம் என்ற மாவட்டத்தில் கடந்த 13 ஆம் திகதி இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

தாக்குதல் குறித்து தலிபான் தீவிரவாதிகள் தங்கள் டுவிட்டரில், எதிரி விமானத்தை நாங்கள் வீழ்த்தி விட்டோம் என்று கூறியுள்ளனர்.

100 மில்லியன் டொலர் மதிப்பிலான இந்த விமானம், தரையிலிருந்து சுமார் 50,000 அடி உயரம் வரை பறக்ககூடியதாகும்.

தற்போது, இந்த விமானம் தாக்கப்பட்டுள்ளதை அமெரிக்க அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இதுவரை சிறியரக விமானங்களை மட்டுமே தாக்கிவந்த தலிபான்கள், முதல் முறையாக அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை தாக்கியது அதிகாரிகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில், அந்த அளவுக்கு ஆயுதப்படை விடயத்தில் அவர்கள் வளர்ந்துவிட்டார்களோ என்ற சிந்தனை அமெரிக்க அதிகாரிகள் மத்தியில் மேலோங்கியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செங்குன்றம் அருகே லாரி அதிபர் வெட்டிக்கொலை…!!
Next post திருமணத்தை ரத்து செய்த மணமகன்: ஆதரவற்றவர்களுடன் விருந்தை கொண்டாடிய மணப்பெண் வீட்டார் (வீடியோ இணைப்பு)…!!