கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராக கால்பந்து வீரர் சிம்சனுக்கு உத்தரவு

Read Time:1 Minute, 51 Second

அமெரிக்காவில் பிரபலமான கால்பந்து வீரராக உருவெடுத்தவர் சிம்சன். இவர் திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கினார். 1994ம் ஆண்டு முன்னாள் மனைவி மற்றும் அவரது நண்பரை கொன்ற வழக்கில் இருந்து சிம்சன் விடுதலை செய்யப் பட்டார். பின்னர், சிவில் கோர்ட் நடத்திய விசாரணையின் போது இறந்து போன இரண்டு பேரின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடாக ரூ.134 கோடி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், கடந்த செப்டம்பர் 13ம் தேதி பேலஸ் ஸ்டேஷன் ஓட்டலுக்கு நண்பர்கள் ஐந்து பேருடன் சென்ற சிம்சன், அங்கிருந்த புருசி ப்ரோமாங் மற்றும் அல்பிரட் பியர்ட்ஸ்லி ஆகியோரை துப்பாக்கி முனையில் மிரட்டி, பரிசுப் பொருட் களை பறித்து சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது. திருடு போன தனது பரிசுப் பொருட்களை திரும்ப பெறவே தான் அங்கு சென்றதாக சிம்சன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கை லாஸ் வேகாஸ் கோர்ட் விசாரித்து வருகிறது. சிம்சனுடன் ஓட்டலுக்கு சென்ற ஐந்து பேரிடமும் விசாரணை நடந்து முடிந்து விட்டது. துப்பாக்கி முனையில் மிரட்டியது உறுதியானதால் சிம்சனும் கோர்ட் விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
Next post பாக்., முன்னாள் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரிக்கு சுதந்திரத்திற்கான பதக்கம்