நந்திகிராமில் கம்யூனிஸ்டுகள் அட்டூழியம்: பெற்றோர் கண் எதிரில் சிறுமிகளை கற்பழித்தனர்- அகதிகளாக வெளியேறிய கொடுமை
நந்தி கிராம் சம்பவம் மேற்கு வங்காளத்தில் ஆளும் கம்யூனிஸ்டு அரசுக்கு பெரும் தலைகுனிவையும், தர்ம சங்கடத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பின் தங்கிய பகுதியான நந்தி கிராமில் சிறப்பு பொருளா தார மண்டலம் அமைக்க மாநில அரசு முடிவு எடுத்து அதற்கான நில ஆர்ஜித பணி யிலும் ஈடுபட்டது. உள்ளூர் மக்களின் கருத்தை கேட்காமல் அரசு எடுத்த முடிவால் அங்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. விளை நிலங்களை அழித்து பொருளாதார மண்டலம் எங்களுக்கு தேவையில்லை என்று நந்தி கிராம் மக்கள் வெகுண்டு எழுந்தனர். நில ஆர்ஜிதம் செய்ய வந்த அதிகாரிகளை தடுத்து திருப்பி அனுப்பினர். போலீசை வைத்து காரியத்தை சாதிக்கலாம் என மாநில அரசு நினைத்தது. ஆனால் போலீசாரின் துப்பாக்கி சூடு நடவடிக்கையால் 14 பேர் பலியானார்கள். ஏராளமானோர் குண்டு காயம் அடைந்தனர். இது அங்கு விபரீதத்தை ஏற்படுத்தியது. நந்தி கிராம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து “நிலம் மீட்பு குழு” என்ற அமைப்பை உருவாக்கி அரசுக்கு எதிராக பெரும் போராட்டத்தில் குதித்தனர். ஆனால் அரசுக்கு ஆதர வாக கம்யூனிஸ்டு தொண்டர்கள் நந்தி கிராம் மக்களுக்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்டது பெரும் விபரீதத்தை ஏற்படுத்தியது. நந்தி கிராம் துப்பாக்கி சூட்டில் பலியான மற்றும் காயம் அடைந்தவர்களை பார்க்க சென்ற எதிர்க்கட்சி தலைவர்கள் தாக்கப்பட்டனர். நந்தி கிராமுக்குள் நுழைய வருபவர்களையெல்லாம் தடுத்தனர். மாநிலத்தின் மற்ற பகுதிகளில் இருந்து நந்தி கிராம் துண்டிக்கப்பட்டது. இதற்கெல்லாம் மேலாக காந்தீய வழியில் போராடும் சமூக சேவகி மேதா பட்கர் நந்தி கிராம் சென்றபோது, தடுத்து நிறுத்தப்பட்டதும், காரில் இருந்து வெளியே இழுத்து தாக்கியதும் அதிர்ச்சி அடைய வைத்தது. அதன் பிறகு மத்திய அரசு தலையிட்டு மத்திய போலீஸ் படையை அனுப்பி வைத்தது.
நந்திகிராம் துண்டிக்கப்பட்ட நிலையில் அங்கு நடந்த அட்டூழியங்கள் வன்முறைச் சம்பவங்களால் மக்கள் வெளி யேறி சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக முகாம்களில் தங்க வைக்கப்பட்ட நிலை ஏற்பட்டது. நிவாரண முகாம்களுக்கு சென்று பார்வையிட்டபோது அங்கி ருந்தவர்கள் சொன்ன தகவல் கண்ணீரை வரவழைப்பதாக இருந்தது.
வன்முறையாளர்களால் பாதிக்கப்பட்ட பெண் சபீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நந்தி கிராமில் கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். நிவாரண முகாமில் இவரது குடும்பம் தங்கியுள்ளது.
சபீனா கூறியதாவது:- கடந்த 6-ந்தேதி நாங்கள் வீட்டில் இருந்தபோது கம்யூனிஸ்டு தொண்டர்கள் கும்பலாக வீட்டுக்கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர். உள்ளூர் கம்யூனிஸ்டு தொண்டர்கள் சிலரும் அவர்களுடன் இருந்தனர்.
நான் எனது 2 மகள்களுடன் வெளியில் தப்பி ஓடினேன். என்னை அவர்கள் பிடித்துக் கொண்டனர். மகள்கள் வயல்வெளியில் கிடந்தனர். என்னை 8 பேர் கற்பழித்து நாசப்படுத்தினார் கள். மகள்களையும் என் கண் முன்னே சிலர் கற்பழித்தனர். அந்த கொடுமையை என் கண்களால் பார்க்க முடியாமல் குமுறி அழுதேன்.
இரவு முழுவதும் அந்த கும்பல் என்னையும் என் 2 மகள்களையும் கெடுத்து நாசமாக்கினார்கள். பிறகு என்னை வீட்டுக்குள் போட்டு விட்டு மகள்களை கடத்திச் சென்று விட்டனர். நான் 2 நாட்களாக வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்தேன். எதுவும் சாப்பிடா மல் பட்டினியால் துடித்தேன். 2 நாள் கழித்து அங்கிருந்து தப்பி வந்தேன். அதன் பிறகு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இவ்வாறு சபீனா கண்ணீர் மல்க தெரிவித்தார்.
காணாமல் போன அவரது 2 மகள்களும் இன்னும் கிடைக்கவில்லை. அவர்கள் கதி என்ன என்று தெரியாமல் குடும்பத்தினர் முகாம்களிலும், பல்வேறு இடங்களிலும் பரிதவிப்புடன் தேடி வருகிறார்கள்.
இதேபோல் தீ வைப்பில் வீடுகளை இழந்த பலரும் நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். நந்திகிராம் அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில் 240 வீடுகள் இருந் தன. இதில் 160 வீடுகள் தீ வைப்பால் நாசம் அடைந்தது. அந்த வீடுகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு முற்றிலும் சேதம் அடைந்து உள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள் பிரோகோ மோகன் பள்ளி யில் உள்ள நிவாரண முகாமில் தங்கியுள்ளனர். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கற்பழிப்பு சம்பவம் பற்றி போலீஸ் சூப்பிரண்டு பந்தா விடம் கேட்டபோது கூறியதா வது:- சபீனா என்ற பெண் கற்பழிப்பு புகார் கொடுத்துள் ளார். மருத்துவ பரிசோதனை யில் அவர் கற்பழிக்கப்பட்டது உறுதியாகி இருப்பதாக டாக்டர் கள் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். கற்பழிக்கப்பட்ட சபீனா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.