நடிகர் வடிவேலுவை நான்கு வருடங்களுக்கும் மேலாக காணவில்லை: போஸ்டரால் பரபரப்பு…!!

Read Time:1 Minute, 53 Second

vadivel_poster_002நடிகர் வடிவேலுவை கடந்த 4 1/2 வருடங்களாக காணவில்லை என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் சங்க தேர்தல் வரும் 18ம் திகதி நடைபெறும் நிலையில், நடிகர் வடிவேலு நாமக்கலில் சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில், நடிகர் சங்கத்தை காணோம் அதைத்தான் தேடிக்கொண்டு இருக்கிறோம் என்று பேட்டியளித்தார்.

இது தொடர்பாக தென் இந்திய நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் என்பவர், நாமக்கல்லில் உள்ள முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் வடிவேலு மீது வழக்கு தொடுத்துள்ளார்.

இந்த வழக்கில் வடிவேலு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியைச் சேர்ந்த தியாகு என்பவர் நேற்று வடிவேலுவுக்கு எதிராக சென்னை நகரில் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளார்.

அதில், நடிகர் வடிவேலுவின் நடிகர் சங்க உறுப்பினர் எண்ணை குறிப்பிட்டு, கடந்த 4 1/2 வருடங்களாக நடிகர் வடிவேலுவைக் காணோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது இது குறித்து நடிகர் வடிவேலுவின் ரசிகர்கள் பொலிசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவரை தாக்கிவிட்டு இளம்பெண்ணை காட்டிற்குள் வைத்து பலாத்காரம் செய்த கொடூர கும்பல்…!!
Next post நீரோடையில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு..!!