நடிகர் கமல் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு

Read Time:2 Minute, 42 Second

நடிகர் கமல் மீது கொலை மிரட்டல் வழக்கை சென்னை போலீசார் பதிவு செய்துள்ளனர். சென்னை மேற்கு தாம்பரம் பூர்ணதிலகம் குறுக்குத் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். உதவி இயக்குனரான இவர், `கமல் பல வேடங்களில் நடித்து வரும் `தசாவதாரம்’ படத்தின் கதை என்னுடையது; கமல் எனது கதையை மோசடி செய்து அபகரித்துள்ளார்’ என ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு தொடர்பாக, நடிகர் கமல் `தசாவதாரம்’ படத்தின் முழு கதையையும் ஐகோர்ட்டில் ஒப்படைத்தார். முழுமையான விசாரணைக்கு பின்னர் வழக்கில் இருந்து நடிகர் கமலை ஐகோர்ட் விடுவித்தது. `நடிகர் கமல் என்னை ஏமாற்றி விட்டார். கமல் திரைப்படத் துறையை சேர்ந்தவராக இருப்பதால், அமைதியான முறையில் நடிகர் சங்கக் கட்டடத்தின் முன்பு உண்ணாவிரதம் இருந்து எதிர்ப்பை தெரிவிக்கிறேன்’ என கூறி ஒரு வாரத்திற்கு முன்பு உண்ணாவிரதம் இருந்தார். போலீஸ் அனுமதியின்றி திடீர் உண்ணாவிரதம் இருந்த உதவி இயக்குனர் செந்தில்குமாரை தேனாம்பேட்டை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். செந்தில்குமார், தாம்பரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கடந்த ஆறாம் தேதி தாக்கல் செய்த மனுவில், `கமல் அடியாட்களை வைத்து என்னை மிரட்டுகிறார். அடியாட்கள் எனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கொலை மிரட்டல் விடுக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார். தாம்பரம் கோர்ட் உத்தரவுப்படி நடிகர் கமலஹாசன், முரளி, கார்த்திக் பிரபு, நிகில் முருகன் மற்றும் அடையாளம் தெரியாத ஏழு பேர் மீது 451-வீட்டிற்குள் அத்துமீறி நுழைதல், 506(2)-கொலை மிரட்டல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post விடுதலைப்புலிகளுக்கு மீண்டும் தடை; இலங்கை அரசுதிடீர்நடவடிக்கை
Next post கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 1200 காசிமேடு மீனவர்கள் கதி என்ன?- கடல் சீற்றத்தால் உறவினர்கள் பீதி