பட்டிருப்பு வலயக் கல்விப்பணிப்பாளரின் அடாவடியால் அதிபர் மரணம்..!!

Read Time:6 Minute, 5 Second

timthumb (1)வலயக் கல்விப்பணிப்பாளரின் நெருக்குவாரத்தால் அதிபர் மனோகரன் மனம் நொந்து நோய்வாய்ப்பட்டுக் காலமானார்.

மட்/ பெரியகல்லாறு அருளானந்தர் வித்தியாலயத்தின் அதிபர் திரு சு. மனோகரன் நோய்வாய்ப்பட்டு இருந்த நிலையில் சிலநாட்களுக்கு முன்னர் காலமானார்.அவரது உடல் அவர் புகுந்த இடமான காரைதீவில் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெரும்திரளானவர்கள் வந்து கலந்து கொண்டனர்.

அதிபர் மனோகரன் அவர்கள் நீண்டகாலமாக ஆசிரியராக,அதிபராக பட்டிருப்பு கல்வி வலயத்தில் கடமையாற்றி வருகின்றார். இவ்வலயத்தில் உள்ள மிகக் கஷ்ட பிரதேசப் பாடசாலையான மட்/பட்/ சின்னவத்தை அ.த.க. பாடசாலையில் போர் காலச் சூழலில் எவரும் சென்று வேலைசெய்ய விரும்பாத சூழலில் தானே முன்வந்து அங்குள்ள எமது சிறார்களுக்கு கல்வி புகட்ட ஆர்வம் கொண்டு பாடசாலைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கு மேல் வேலை செய்திருக்கின்றார்.

இவர் தினசரி காரைதீவில் இருந்து புறப்பட்டு ஐம்பது கிலோமீற்றர் தூரம் பிரயாணம் செய்து பாடசாலைக்கு சென்று மீண்டும் ஐம்பது கிலோமீற்றர் தூரம் பிரயாணம் செய்து வீடு வந்து சேருவார். இவ்வாறாக தனது கடமையை நேர்த்தியாகச் செய்து வந்தார். உயர் அதிகாரிகளின் தவறான செயற்பாட்டுக்கு உடன்போகமல் தட்டிக் கேட்பதால் அவர் மிகவும் பாதிக்கப் பட்டார். இவருக்கு எதிராக வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி. ந. புள்ளநாயகம், போரதீவு கோட்டக் கல்விப்பணிப்பாளர் திரு.பூ. பாலச்சந்திரன் ஆகியோர் என்னென்ன எதிர் நடவடிக்கைகளை எடுக்க முடியுமோ அத்தனை நடவடிக்கைகளையும் எடுத்தனர்.

நீண்டகாலத்துக்குப் பிறகு மட்/ பெரியகல்லாறு அருளானந்தர் வித்தியாலயத் திற்கு அதிபர் வெற்றிடம் ஏற்பட்ட போது அதற்கு விண்ணப்பித்து நேர்முகப் பரீட்சையில் தெரிவாகி கடந்த 2014 ஜூலை மாதம் இவ்வித்தியாலயத் தில் அதிபராக கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார். எனினும் எந்த சட்டவிதிகளிலும் இல்லாத நிபந்தனை இவருக்கு பட்டிருப்பு வலய கல்வி அலுவலகத்தினால் பின்பற்றப்பட்டது.

01 ) இவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றக் கடிதத்தில் பாடசாலைப் பொருட்கள் மற்றும் பொறுப்புகளை தான் சொல்பவரிடம்தான் கையளிக்க வேண்டும் என்பது, இதனால் பாடசாலைப் பொறுப்புகளை எவரிடமும் கையளிக்க
முடியாதிருந்தது.

02 ) அவருக்கான சம்பளப்பணம் புதிய பாடசாலையில் வழங்கப்படாது தொடர்ந்தும் முன்னைய பாடசாலையில் வழங்கப்பட்டு வந்தது.

இவ்வாறான செயற்பாடுகளால் மனவழுத்தத்திற்கு உட்பட்ட மனோகரன் அதிபர், இது தொடர்பாக மேலதிகாரிகளிடம் தெரியப்படுத்தியும் அவை பொருட்படுத்தப் படவில்லை. இதனால் பல்வேறு நெருக்குவாரங்களுக்கு மத்தியில் நோய்வாய்ப்பட்டார். இரண்டு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை பலனின்றி இறைபதம் அடைந்தார்.

இதில் மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால் கடந்த மாதத்தில் (செப்டெம்பர் ) இருந்து இவரது சம்பளப்பணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காரணம் முன்னைய பாடசாலையில் பெறப்படும் சம்பளப்பணத்திற்கு கொடுப்பனவுப் பத்திரத்தில் கையொப்பமிட்டே சம்பளம் பெற்றிருக்கின்றார். ஆனால் இது தவறு என்றும் செல்கொன் ( selcon ) பத்திரத்தினைச் செலுத்தியே பெறவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பொறுப்பில் உள்ளவரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

மட்/பட்/ சின்னவத்தை அ.த.க. பாடசாலைக்கு அதிபர் யார் என்று தெளிவில் லாத நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது. மேலும் புதிய அதிபர் பதவிற்கான விண்ணப்பம் தற்போது வலயக் கல்வி அலுவலகத்தினால் கோரப்பட்டும் உள்ளது. இங்கு நடக்கின்றது என்ன என்று எவருக்காவது புரிகின்றதா? இவரது மரணத்துக்கு யார் பொறுப்பு? கல்வித்திணைக்களம் பதில் கூறுமா? அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாட்டை யார் தட்டிக்கேற்பது.? நல்லாட்சியில் தொடர்ந்து இப்படியான மனநோய்கொண்ட நிர்வாகிகள் இருக்கலாமா?

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் பற்றிய முறைப்பாடுகள் தற்போது கிழக்கு மாகாண சபையில் விசாரணைக்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அதிபர் மனோகரனின் மரணம் நிகழ்ந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தூத்துக்குடியில் பள்ளி மாணவி வெட்டிக்கொலை: கைதான அண்ணன் வாக்குமூலம்..!!
Next post தந்தை இறந்த மனஉளைச்சலால் மகள் தற்கொலை..!!