வேலூரில் மின்கம்பத்தில் கார் மோதி ஒருவர் பலி…!!

Read Time:1 Minute, 45 Second

5cd9acba-73dc-406c-aa7d-cecd656a36a9_S_secvpfகிருஷ்ணகிரியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் பாஸ்கர், கார்த்தி, கிருஷ்ணமூர்த்தி, புவனேஷ்வரன் ஆகியோர் அவர்களது நண்பர் மகராஜன் என்பரை அழைக்க நேற்று சென்னைக்கு காரில் விமான நிலையம் சென்றனர்.

பின்னர் அங்கிருந்து 5 பேரும் கிருஷ்ணிகரி நோக்கி வந்தனர். காரை பாஸ்கர் ஓட்டினார். வேலூர் கொணவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது கார் நிலை தடுமாறி சாலை நடுவில் உள்ள மின்கம்பத்தில் மோதியது.

இதில் காரில் இருந்த 5 பேரும் படுகாயம் அடைந்தனர். புவனேஷ்வரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

புவனேஷ்வரன் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய கார் திருவண்ணாமலையை சேர்ந்த அ.தி.மு.க. கிளை செயலாளர் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமானது. அதனை பாஸ்கர் நட்பின் அடிப்படையில் சென்னை சென்று வர ஓட்டி வந்துள்ளார்.

வேலூர் தாலுகா போலீசார் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேனி அருகே குழந்தையை கொன்று தற்கொலை செய்த தம்பதி…!!
Next post பவானியில் ஓடும் காரில் தீ விபத்து: வாலிபர் உயிர் தப்பினார்..!!