இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா உயிருக்கு விடுதலைப்புலிகளால் ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை

Read Time:1 Minute, 37 Second

Chanthitikka4.gifஇலங்கையில் சந்திரிகா அதிபராக இருந்தபோது அவரை கொல்வதற்கு விடு தலைப்புலிகள் பலமுறை குறி வைத்தனர். ஒரு தடவை மனித வெடிகுண்டு தாக்குதலில் சந்திரிகா மயிரிழையில் உயிர் தப்பினார். அவருடைய ஒரு கண் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த நிலையில் இலங்கை அரசு உளவுத்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சந்திரிகா உயிருக்கு விடுதலைப்புலிகளால் இன்னும் ஆபத்து இருக்கிறது.

1995 முதல் 1998 வரை சந்திரிகா உயிருக்கு 18 முறை குறி வைக்கப்பட்டது. தமிழர்களின் பரம்பரை எதிரியாக சந்திரிகாவை கருதுகிறார்கள். எனவே அவரின் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றனர். எனவே அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை உளவுத்துறை பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அனுப்பி உள்ளது. இதன் மேல் நடவடிக் கைக்காக அதிபர் ராஜபக்சே வுக்கு அறிக்கையை அனுப்பி வைத்துள்ளனர்.

சந்திரிகா தற்போது இங்கிலாந்தில் இருக்கிறார். விரைவில் கொழும்பு திரும்ப உள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நடிகர் சங்கத் தலைவர் ஆனார் சரத்குமார்
Next post ஈராக்கில் துப்பாக்கி முனையில் ஒலிம்பிக் குழு தலைவர் உள்பட 52 பேர் கடத்தல்