ஆறே மாதங்களில் அசுர வளர்ச்சி அடைந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்க்குட்டி…!!

Read Time:1 Minute, 39 Second

ccc013fa-e00c-4382-aa05-77b242cea913_S_secvpfகுழந்தைகள் வளர்வது மற்றவர்களுக்கு கண்கூடாகத் தெரிந்தாலும், செல்லமாக வளர்க்கும் பெற்றோருக்கு மட்டும் ஏனோ அது தெரிவதேயில்லை! குழந்தைகளுக்கு எப்படியும், உடலளவில் மெதுவாகத்தான் மாற்றம் ஏற்படும். ஆனால், விலங்குகள்..!

ஆஷ்லே லூயிஸ் என்கிற பெண் வளர்க்கும் நஸ்ரா என்கிற ஜெர்மன் ஷெப்பர்ட், ஆறே மாதங்களில் அசுர வளர்ச்சியடைந்துள்ளது. (நஸ்ராவைப் பார்க்கும்போது, நல்லவேளை மனிதனின் உடல் வளர்ச்சி சற்றே மெதுவாக இருக்கின்றது என மகிழ்ச்சியடைவதாக உள்ளது).

இரண்டு மாதக் குட்டியாக இருந்ததிலிருந்து ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து தனது செல்ல நாயுடன், ஒரே போஸில் புகைப்படம் எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார் ஆஷ்லே.

அக்கம்பக்கத்தில் வசிப்போரெல்லாம் ஆஷ்லேயுடன் வலம் வரும் செல்ல நாயான நஸ்ராவின் வளர்ச்சி விகிதத்தைக் கண்டு மிரண்டுபோயினர். ஆனால், ஆஷ்லேவோ, நஸ்ரா எப்போதும் போலவே கொஞ்சி விளையாடி வருவதால் இந்த வித்தியாசத்தை உணரவில்லையாம்! அவர் மாதம் ஒருமுறை நஸ்ராவுடன் எடுத்து வந்த புகைப்படத்தைக் கண்டால்தான் வளர்ச்சியை அறிய முடியும்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நிலச்சரிவு: 7 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி…!!
Next post கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொன்று புதைப்பு…!!