தென் கொரியாவில் 6 வயதில் பிரிந்த சகோதரிகள்: 46 வயதில் அமெரிக்காவில் ஒன்று சேர்ந்த வினோதம் (வீடியோ இணைப்பு)…!!

Read Time:2 Minute, 28 Second

sisters_reunite_002தென் கொரியாவில் 6 வயதில் பிரிந்த சகோதரிகள் 40 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் ஒன்று சேர்ந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென் கொரியாவை சேர்ந்தவர்கள் போக் நாம் ஷின் மற்றூம்யூன் ஷூக் ஷின். சகோதரிகளான இவர்கள் தாயின்றி குடிகாரத் தந்தையுடன் வசித்து வந்தனர். பின்னர் தந்தையையும் ரெயில் விபத்தில் இழந்து அனாதையாகினர்.

இதனையடுத்து இரண்டு வெவ்வேறு குடும்பங்களால், தத்தெடுக்கப்பட்டு இருவரும் அமெரிக்காவிலேயே குடியேறினர். வளர்ப்புப் பெற்றோர் இந்தச் சிறுமிகளுக்கு புதிய பெயரை வைத்துவிட்டனர்.

இந்நிலையில் மூத்த சகோதரி போக் நாம் ஷின் தனது சகோதரி யூன் ஷூக் ஷின்னைப் பற்றி தனது வளர்ப்புப் பெற்றோரிடம் ஒரு நாள் தெரிவித்தார்.

அவர்களும் போக்கை தாம் தத்தெடுத்த இல்லத்தை தொடர்புகொண்டு இது தொடர்பாக விசாரித்துப் பார்த்தனர், எனினும், விவரங்கள் கிடைக்கவில்லை. தனது தங்கையை கண்டறிய எண்ணிய போக்கின் முயற்சிகள் வீணாக போயின.

இந்நிலையில் புளோரிடாவின் மருத்துவமனையில் பணிபுரியத் தொடங்கினார் போக் நாம். அதே மருத்துவமனையில் சில மாதங்கள் கழித்து யூன் ஷூக்கும் பணியில் சேர்ந்தார்.

ஒரே நாட்டைச் சேர்ந்த இருவரையும் மருத்துவமனையில் பணிபுரியும் ஒருவர் எதேச்சையாக அறிமுகப்படுத்தி வைத்தார்.

பின்னர் பல்வேறு கட்ட சந்திப்புகளுக்கு பின் தாம் இருவரும் சகோதரிகள் என்பதை அறிந்த இருவரும் சகோதரிகள் கண்ணீர் மல்க ஒருவரையொருவர் அன்பாகத் தழுவிக் கொண்டனர்.

நாற்பது ஆண்டுகள் கழித்து சகோதரிகள் இருவரும் இணைந்திருப்பது அங்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எலும்புக்கூடு ஆடையுடன் தோன்றிய ஆசிரியை: ஆச்சரியத்துடன் கவனித்த மாணவர்கள் (வீடியோ இணைப்பு)…!!
Next post வேட்டைக்கு சென்றபோது காணாமல் போன நபர்: எறும்புகளை தின்று உயிர் பிழைத்த அதிசயம்…!!