நூறாண்டுகளுக்கு மேல் வாழ்ந்து சாதனை படைத்து வரும் ’மிஸ்டர் யுனிவெர்ஸ்’ (வீடியோ இணைப்பு)…!!
மிஸ்டர் யுனிவெர்ஸ்’ பட்டத்தை மூன்றாவது பிரிவில் 1952 ம் ஆண்டில் வென்று அதன் மூலம், உலக சாம்பியன் பட்டம் வென்ற, முதல் இந்தியனாக விளங்கியவர் மனோகர் அய்ச்.
1914, மார்ச் 17 ல் பிறந்த அவருக்கு தற்போது 101 வயது முடிந்துள்ளது. இவர் பிரபஞ்ச அழகன் (Mr.Universe) பட்டத்தை வென்றது 1952 ம் ஆண்டில்தான்.
’மிஸ்டர் யுனிவெர்ஸ்’ சாம்பியன் வெற்றியால் உலக வரைபடத்தில் எல்லா நாட்டவரையும் இந்தியாவை தேடவைத்தவர்.
இவர் ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் மூன்று முறை கட்டுடல் காண்பித்தலில் (Body building) தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இவருடைய உயரம் 4 அடிகள் 11 இஞ்ச்தான். இதன் காரணமாகவே வெளிநாட்டு நண்பர்களால் பாக்கெட் ஹெர்குலிஸ் இன்று பாசமாக அழைக்கப்பட்டார்.
இளம் வயதிலே உடற்பயிற்சியில் அதிக ஈடுபாடு கொண்டவர். ஆனாலும், அவருக்கு உலக சாம்பியனாக வேண்டும் என்ற குறிக்கோள் அப்போது இல்லை.
அந்த காலகட்டங்களில் உடற்பயிற்சி கூடங்களோ (ஜிம்) உடற்பயிற்சி கருவிகளோ ஒன்றும் அவ்வளவாக எங்குமே தோன்றாத காலம். அதனால், அவருக்கு தெரிந்த அளவில் புஷ் அப்ஸ், புல் அப்ஸ், ஸ்குவாட், லெக் ரைஸ் போன்ற பளு தூக்கும் (Weight Lift), பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டார். அவருடைய சரியான முயற்சியில் கட்டழகும் நினைத்தபடி உருவானது.
உணவிலும் இப்போது உடற்பயிற்சியாளர்கள் கடைப்பிடிப்பது போல சிறப்பாக எதுவும் கடைப்பிடிக்கவில்லை. இயற்கை தாயின் உணவுகளான காய்கறிகள், பழங்கள், பயறுகள், அரிசி, பால் மற்றும் மீன் போன்றவையே.
இவர் 1942 ல் ராயல் விமானப்படையில் சேர்ந்தபோது, இவருடைய உயர் அதிகாரி ரீப் மார்ட்டின், அய்ச்சை பளு தூக்கும் பயிற்சி கற்றுக்கொள்ளும்படி கட்டளையிட்டார். பளுதூக்குதலில் அடிப்படை ஆர்வம் கொண்டிருந்த ஆய்ச்சுக்கு அது ஒரு நாடக திருப்பம்போல நல்ல வாய்ப்பாக அமைந்தது.
இவர் 1951 ம் ஆண்டில்தான் முதன்முதலாக மிஸ்டர் யுனிவெர்ஸ் போட்டியில் கலந்துகொண்டு, இரண்டாம் பரிசு பெற்றார். 1952 ம் ஆண்டில் உலக சாதனை புரிந்ததை அடுத்து, 1955 ல் கலந்துகொண்டு மூன்றாம் பரிசு பெற்றார்.
அடுத்து அவருடைய 47 வது வயதில் 1960 ல் கலந்துகொண்டு 4 வது இடத்தைப் பிடித்தார். அவர் இறுதியாக கலந்துகொண்ட சம்பியன்சிப் போட்டி என்றால் 2003 ல் அவரது 97 வது வயதில் கலந்துகொண்டதுதான்.
இவர் பிரிட்டிஷ் இந்தியாவில் இந்தியாராக இருந்தாலும் பிறப்பிடத்தின் காரணமாக பங்களாதேஷை சேர்ந்தவர்.
மனோகர் அய்ச் மனநிலையில் இந்தியன் என்பதிலும் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதிலும் திருப்திகொள்கிறார்.
இவர் மிஸ்டர் யுனிவெர்ஸ் பட்டம் வென்றதைவிடவும் நூற்றாண்டை கடந்து வந்ததுதான் ஆன்ம பலம்.
பெரிய சாதனைகளை படைத்த உடற் பயிற்சியாளர்கள் கூட நூறு வயதுக்குமேல் வாழமுடியாதபோது, ஆரோக்கியமுடன் இவர் வாழ்ந்தும் காட்டியது உடற் பயிற்சியாளர்கள் வரலாற்றுக்கே பெருமை.
Average Rating