நாயை துரத்தி சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்: குப்பை லொறியில் மோதி பலியான பரிதாபம்…!!

Read Time:2 Minute, 48 Second

canada_boy_died_002கனடா நாட்டில் நாயை துரத்தி சென்ற 8 வயது சிறுவன் ஒருவன் அவ்வழியாக வந்த குப்பை லொறி மீது மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள ஹோப் நகரில் தான் இந்த துயர சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

நகரில் உள்ள ஒரு குடியிருப்பில் 8 வயது சிறுவனான ஜோரின் மில்ஸ் தனது பெற்றோர்களுடன் வசித்து வந்துள்ளான்.

மிகவும் சுறுசுறுப்பான சிறுவனான ஜோரின் கடந்த புதன் கிழமை பிற்பகல் நேரத்தில் தெருவில் இருந்த நாயை கண்டு அதனை துரத்தி சென்றுள்ளான்.

அப்போது, அவ்வழியாக குப்பைகளை ஏற்றிக்கொண்டு வந்துக்கொண்டுருந்த லொறியில் மோதி நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளான்.

இந்த பயங்கர காட்சியை கண்டு சிலர் உயிருக்கு போராடிக்கொண்டுருந்த சிறுவனை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தான்.

ஏழையான அந்த சிறுவனின் குடும்பத்திற்கு அப்பகுதி மக்கள் ஆறுதல் கூறுவதுடன், நூற்றுக்கணக்காணவர்கள் ஒன்று திரண்டு சிறுவனின் இறுதி சடங்கிற்கான தேவையான நிதியை திரட்டியுள்ளனர்.

இதுவரை 2,200 டொலர்கள் திரட்டி குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை பார்த்த Talia Edwards என்ற பெண் கூறுகையில், குப்பைகளை ஏற்றிக்கொண்டு லொறி மிதமான வேகத்தில் தான் வந்துள்ளது.

ஆனால், சிறுவன் ஓடிவருவதை லொறி ஓட்டினர் கவனிக்காமல் இருந்ததால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த விபத்தில் லொறி ஓட்டுனர் காரணமாக இருக்க முடியாது என்பது தான் இங்குள்ள ஒவ்வொருவரின் கருத்தாக இருக்கிறது என கூறியுள்ளார்.

குப்பை லொறியில் மோதி உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பாக அந்நகர பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2 பெண் பொலிசாரை சுட்டுக்கொன்ற மனநோயாளி: பிரித்தானிய நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!
Next post காசு கொடுத்து மாணவனுடன் உடலுறவு கொண்ட இந்திய ஆசிரியர்: அமெரிக்காவில் கைது..!!