கால ஓட்டத்தில் கேணல் கருணா

Read Time:2 Minute, 19 Second

karunawithltte004.jpgஇயற் பெயர் : முரளிதரன் விநாயகமூர்த்தி,
வயது : 40,
பிறப்பிடம் : மட்டக்களப்பு
1983ல் புலிகளில் இணைந்தார்.
இராணுவத் தேர்ச்சி : இணைந்து சில ஆண்டுகளிலேயே உயர்மட்ட கொமாண்டர் ஆனார்.
ஜெயந்தன் படையணியை உருவாக்கியவர்.
1997 – 98ல் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையை முன்னின்று நடத்தியவர்.
யாழ் மீட்பு யுத்தத்தில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆனையிறவுத் தளத்தை கைப்பற்றினார்.
2003ல் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட சிறப்புக் கொமாண்டராக நியமிக்கப்பட்டார்.
18000 போராளிகளைக் கொண்ட புலிப்படையில் உள்ள 7 கேணல்களில் இவர் ஒருவர்.
இவரது நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள மட்டக்களப்பு அம்பாறை மாவட்டப் படையணியில் 6000 – 8000 போராளிகள்.
2003ல் பாங்கொக், ஒஸ்லோ, ரோக்கியோ ஆகிய இடங்களில் நடைபெற்ற சமாதானப் பேச்சுக்களில் கலந்து கொண்டார்.
2004ல் பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவக் கிளர்ச்சியை மேற்கொண்டார். பல நூற்றுக் கணக்கான போராளிகள் உயிரிழந்தனர்.

2004 டிசம்பரில் சுனாமியால் இலங்கையில் வரலாறு காணாத பேரழிவு ஏற்பட்டது.
2004 – 2006 இலங்கை இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டார். மனித உரிமை மீறல்கள், ஆட்கடத்தல், சிறுவர்களை இராணுவத்தில் சேர்த்தல், கொள்ளை ஆகிய குற்றச்சாட்டுகள் கருணா மீது சர்வதேச அமைப்புகளால் வைக்கப்பட்டது.
2007ல் கருணா – பிள்ளையான் இடையேயான மோதல் விரிவடைந்தது.
2007 செப்ரம்பரில் கருணா லண்டன் வந்தார்.
2007 நவம்பர் 2ல் கருணா லண்டனில் கைது செய்யப்பட்டு, குடிவரவுத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார்.

karunawithltte004.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்… (அழகிகள்! உலகப் பேரழகிகள்!!)
Next post சிடார் புயலால் வங்கதேசத்தில் பெரும் சேதம் – 250 பேர் பலி : ஆயிரம் மீனவர்கள் கதி என்ன?