குழந்தைகளுக்கு ஆபத்து…!!

Read Time:2 Minute, 38 Second

download-21-300x168-615x344குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சர் க்கரை உள்ள உணவுகளை கொடுப்பதன் மூல ம், குழந்தைகள் நோயாளிகளாக உருவாகின் றனர்.

சர்க்கரை அதிகமாகவும், வைட் டமின் மற்றும் தாதுபொருட்கள் குறைவாகவும் உள்ள உணவு வகைகளை உட்கொண்டு வருபவர்க ளுக்கு, உடம்பில் ரசாயன மாறுதல் ஏற்பட்டு அளவுக்கு மிஞ்சிய துடுக்குதனத்தையும் தூண் டி விடும்.

ஜப்பானில் பெருகிவரும் வன்செயல் களுக்கும்,நொறுக்கு தீனிகளுக்கும் அதிக தொ டர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகிறது. இனிப்பான பொரு ட்களை உண்ணும் போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள், ஒரு வித அமிலத்தை உருவாக்கும். இந்த அமிலம், பற்களில் உள்ள “எனாமலை’ அரித்து ஓட்டையாக்கி, பல்லில் சொத்தையை ஏற்படுத்தும்.

சர்க்கரையும், கொழுப்பும் உள்ள உணவு பொருட்கள், ரத்தத் தில் “கொலஸ்ட்ரால்’ அளவை அதிகரித்து விடுவதால், இருதய நாளங்கள் அடைப டுகின்றன. இதனால், ரத்தம், ஆக்சிஜன் மற்றும் சத்துக்கள் செல்வது தடைபடுகி றது. இது தொடருமானால், ஒருவரு டைய தசைநார்கள் இறந்துபோய், மாரடைப்பை ஏற்படுத்தும். இந்த மாரடைப்பிற்கு குழந்தை பருவத்திலேயே நாம் வித்திட்டு விடுகி றோம்.

தினமும் 24 தேக்கரண்டி சர்க்கரை யை நாம் உணவில் சேர்த்தால், 92 சதவீத வெள்ளை ரத்த அணுக்கள் உருவாவதை தடுக்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் அபாயகர மான பாக்டீரியாக்களை எதிர்க்கு ம். உடலில் அதிகம் சர்க்கரை இருந் தால் அதை சுத்தப்படுத்த அதிகமாக “இன்சுலின்’ வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியா கும் “இன்சுலினுக்கும்’ நோய் எதிர் ப்புசக்தியை தடுக்கும் ஹார் மோன் களான, புரோஸ்டேகிளேன்டான்-க்கும் அதிக தொடர்பு இருக்கிறது .இது புற்றுநோய் கட்டியை உருவாக்குகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேசிய மட்ட போட்டியில் யாழ்.மாணவன் புதிய சாதனை…!!
Next post முகத்துக்கு அழகூட்டும் சில ஃபேஸ் பேக்…!!