4 கோடி ஆண்டுகள் கர்ப்பமாக இருந்த அதிசய குதிரை: ஜேர்மனியில் ஒரு வரலாற்று கண்டுபிடிப்பு…!!

Read Time:3 Minute, 2 Second

fossil_horse_002உலக வரலாற்றில் முதன் முறையாக சுமார் 4 கோடியே 80 லட்சம் ஆண்டுகள் கர்ப்பமாக இருந்த குதிரை ஒன்றை ஜேர்மனி தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.
ஜேர்மனியில் உள்ள Frankfurt நகரில் கடந்த 2000ம் ஆண்டு நடத்தப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியின்போது, பழங்காலத்தில் வாழ்ந்த குதிரையின் புதைபடிமம் கண்டுபிடிக்கப்பட்டது.

எனினும், குதிரையின் படிமம் குறித்து கடந்த 14 ஆண்டுகள் நடத்திய ஆராய்ச்சியில் இதனை விட மிகப்பெரிய வியப்பு ஒன்று ஆராய்ச்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அதாவது, கண்டெடுக்கப்பட்ட குதிரையின் வயிற்றில் சிசுக்கரு இருந்ததை கண்டு ஆராய்ச்சியாளர்கள் பெரும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

4 கோடியே 80 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு குதிரை கர்ப்பமாகி, அந்த கரு தற்போது வரை குதிரையின் வயிற்றிலேயே இருந்து வருகிறது.

இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், 4 கோடியே 80 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் Eurohippus messelensis என்ற இனத்தை சேர்ந்த குதிரை ஒன்று வாழ்ந்துள்ளது.

இது தற்காலத்தில் உள்ள நவீன குதிரை இனத்தின் முந்தைய உறவினர் என்றும் கூறலாம்.

குதிரை கர்ப்பமாக இருந்தபோது சில சூழ்நிலைக்காரணமாக தாய் குதிரை இறந்திருக்க வேண்டும். ஆனால், பிரசவத்தின்போது தான் தாய் குதிரை இறந்தது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை.

சிறிய நாய் வடிவத்தில் இருந்த தாய் குதிரையின் வயிற்றில் இருந்த சிசுக்கருவையும் ஆராய்ச்சி செய்தோம்.

அதில், 12.5 செ.மீ நீளமுள்ள சிசுவின் தலைப்பகுதி மட்டும் சிதைந்த நிலையிலும், உடல் முழுவதும் சீரான வடிவத்திலும் இருந்ததை கண்டு வியந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், தற்போதுள்ள நவீன கால குதிரைகளின் இனப்பெருக்க முறையை விட, 4 கோடியே 80 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இந்த குதிரையின் இனப்பெருக்க முறை முற்றிலும் மாறுப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராஜஸ்தானில் சிலிண்டர் வெடித்து 5 பேர் பலி: 3 வீடுகள் தரைமட்டம்…!!
Next post தொழில்நுட்ப உலகில் மற்றுமொரு புரட்சியை ஏற்படுத்த அறிமுகமாகும் கமெரா…!!