பாலியல் பலாத்காரம்: சென்னை காப்பகத்தில் சிறுமியிடம் விசாரணை – முக்கிய புள்ளிகள் கலக்கம்…!!
சிவகங்கை ஆரோக்கிய நகரைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் போலீஸ்காரராக பணியாற்றி டிஸ்மிஸ் ஆனவர். இவரது மனைவி இறந்து போனார். 17 வயது மகள் மற்றும் மகன் கார்த்திக் (23) ஆகியோருடன் வசித்து வந்தார்.
முத்துப்பாண்டியும், மகன் கார்த்திக்கும் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். வேறு சிலரையும் அந்த சிறுமிக்கு பாலியல் பலாத்காரம் செய்ய வைத்துள்ளனர்.
கோயம்புத்தூர் சென்று இருந்த அந்த சிறுமி தனது அத்தை சுசீலாவிடம் இதுபற்றி தெரிவித்தார். அவர் சிவகங்கை மகளிர் போலீசில் புகார் தெரிவித்ததன் பேரில் சிறுமியின் தந்தை முத்துப்பாண்டி, அண்ணன் கார்த்திக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் சிவகங்கை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அந்த சிறுமியை ஆஜர்படுத்தினர். அங்கு அந்த சிறுமியிடம் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது. பின்பு, கோர்ட்டு உத்தரவின் பேரில் அந்த சிறுமி சென்னையில் உள்ள ஒரு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிவகங்கை நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், சிறுமியின் உறவினர்கள் சுரேஷ்குமார், செந்தில் குமார், அண்ணன் கார்த்திக்கின் நண்பர் அரவிந்த் ஆகிய 4 பேரை கடந்த புதன் கிழமை போலீசார் கைது செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக மதுரை திருமங்கலம் ஜவகர் நகரைச் சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் நமச்சிவாயம் என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
சிறுமியின் தாத்தா உறவு முறையான முத்துராக்கு என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் இதுவரை சிறுமியின் தந்தை முத்துப்பாண்டி, அண்ணன் கார்த்திக் ஆகியோரையும் சேர்த்து மொத்தம் 8 பேர் கைதாகி உள்ளனர்.
சிவகங்கை நகர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சங்கர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பின் மதுரையில் ஐ.ஜி. அலுவலகத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த ஒருவருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். அவர் பல முறை அந்த சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார்.
அப்போது ஐ.ஜி.யாக இருந்தவருக்கும் சிறுமியை அறிமுகம் செய்துள்ளனர். அவரும் சிறுமியை பலமுறை சீரழித்துள்ளார். அந்த ஐ.ஜி.க்கு சிறுமி மட்டுமல்லாமல் வேறு பல பெண்களையும் இன்ஸ்பெக்டர் அறிமுகப்படுத்தி உள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
தற்போது சென்னையில் பணியாற்றும் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது.
இதில் ஒருவர் கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்திலும் மற்றொருவர் போலீஸ் ஐ.ஜி.யாகவும் இன்னொருவர் துணை கமிஷனராகவும் உள்ளனர்.
இந்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் முதல் ஏ.டி.ஜி.பி. மற்றும் டாக்டர், வக்கீல் உள்பட முக்கிய புள்ளிகள் பலர் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பாக சென்னையில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுமியிடம் சிவகங்கை உதவி போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே, மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகா ஆகியோர் நேற்று மேலும் விசாரணை நடத்தினர்.
இதனால் முக்கிய புள்ளிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
Average Rating