பழ நெடுமாறன் மீதான வழக்கு வாபஸ்

Read Time:1 Minute, 18 Second

LTTE.Piraba-neduamaran.jpgதடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக பழநெடுமாறன், சுபவீரபாண்டியன், பாவாணன், தாயப்பன், சாகுல்ஹமீது ஆகியோர் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். பல மாதங்கள் கழித்து இவர்கள் ஜாமீனில் விடப்பட்டனர். பொடா மறு ஆய்வு குழுவானது இவர்கள் மீது பொடா வழக்கு தொடர முகாந்திரம் இல்லை என்று 2005-ம் ஆண்டில் தீர்ப்பு கூறியது. இந்த முடிவை எதிர்த்து கடந்த அ.தி.மு.க. ஆட்சியானது சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இந்த வழக்கை வாபஸ் பெற முடிவு செய்தது.

இந்த வழக்கை தமிழக அரசு வாபஸ் பெறுகிறது என்று ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி ரவிராஜபாண்டியன் வழக்கை வாபஸ் பெறுவதை ஏற்றுக்கொண்டார். இதனால் பழநெடுமாறன் உள்பட 5 பேர் மீதான பொடா வழக்கு முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
LTTE.Piraba-neduamaran.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post போலந்து நாட்டில் புதிய பிரதமர் பதவி ஏற்றார்
Next post நடிகர் சங்கத் தலைவர் ஆனார் சரத்குமார்