கள்ளக்காதல் மோகத்தால் 2 குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்று விட்டேன்: கைதான கல்நெஞ்ச தாய் பகீர் வாக்குமூலம்..!!!

Read Time:4 Minute, 26 Second

6dff4e2e-1d59-4b79-b7f2-177ec7b75122_S_secvpfஈரோடு அருகே உள்ள காளிங்கராயன் பாளையம் மணக்காட்டூரை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 29). இவரது மனைவி ரஞ்சிதா (25). இவர்களது மகன்கள் நித்திஷ் (5), அன்பரசு (2).

கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ரஞ்சிதா கணவனை விட்டு பிரிந்து சித்தோடு அருகே கொங்கம்பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டில் 2 மகன்களுடன் வசித்து வந்தார்.

கடந்த ஆகஸ்டு மாதம் தனது வீட்டில் படுத்து இருந்த நித்திஷ், அன்பரசு இருவரும் மர்மமான முறையில் இறந்தனர்.

“சளிக்கு மாத்திரை வாங்கி கொடுத்தேன். இதை சாப்பிட்ட அவர்கள் இறந்து விட்டனர்” என்று தாய் ரஞ்சிதா போலீசில் புகார் செய்தார்.

இறந்து போன சிறுவர்களின் தந்தை ஈஸ்வரன், “தனது மகன்களின் சாவில் சந்தேகம் உள்ளது. அவர்களை பாவிகள் கொன்று விட்டனர். எனது மனைவி ரஞ்சிதா மீது சந்தேகம் உள்ளது. இது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று போலீசில் பரபரப்பு புகார் கூறினார்.

இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கடந்த 2 மாதமாக இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. இது பற்றி போலீசாரிடம் கேட்ட போது இறந்து போன சிறுவர்களின் உடல்பாகங்கள் கோவைக்கு ரசாயன பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதன் அறிக்கை வந்தவுடன் மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று கூறினர்.

இந்த வழக்கில் நேற்று நித்திஷ், அன்பரசு ஆகியோரின் தாயார் ரஞ்சிதா மற்றும் அவரது தாயார் சிவகாமி ஆகியோர் திடீர் என்று கைது செய்யப்பட்டனர்.

2 குழந்தைகளுக்கும் தாயார் ரஞ்சிதா உணவில் விஷம் வைத்து ஊட்டி விட்டு கொலை செய்ததாகவும் இதற்கு அவரது தாயார் சிவகாமி உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இது பற்றி ரஞ்சிதாவிடம் போலீசார் விசாரணை நடத்திய போது இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கள்ளக்காதல் இருந்ததாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும் இதற்கு தனது மகன்கள் இடையூறாக இருந்ததால் அவர்களை விஷம் வைத்து கொன்று விட்டதாகவும் வாக்குமூலம் கொடுத்தார்.

மேலும் அவர் கூறியதாவது:–

என் கணவருடன் ஏற்பட்ட தகராறில் நான், என் தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தேன்.

எனக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதுவே கள்ளக்காதலாக மாறியது. கணவரை பிரிந்து வாழ்ந்த நான் அவருடன் சேர்ந்துவாழ ஆசைப்பட்டேன்.

கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ வேண்டியது இருந்தால் 2 குழந்தைகள் இடையூறாக இருக்குமே என எண்ணினேன். இதனால் 2 குழந்தைகளையும் கொன்று விட்டால் எந்த இடையூறும் இருக்காதே… என்று எண்ணினேன்.

இதனால் சம்பவத்தன்று குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்கும் போது பூச்சி மருந்தை (விஷம்) கலந்து கொடுத்தேன். அதை சாப்பிட்ட 2 குழந்தைகளும் இறந்து விட்டது. மாத்திரை கொடுத்ததால் ஏதோ ஆகி குழந்தைகள் இறந்து விட்டது என கூறி தப்பி விடலாம் என நினைத்தேன். ஆனால், போலீசார் விசாரணையில் சிக்கி கொண்டேன் என்று கூறினார்.

இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 14 யானைகள் விஷம் வைத்து கொலை..!!
Next post சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது 1500 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து ரஷ்யா ஏவுகணை வீச்சு..!!