இந்த அறிகுறிகளை சாதாரணமாக நினைத்து விட வேண்டாம் – எச்சரிக்கை!!!
நாம் எப்போதுமே எதையெல்லாம் மிக தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டுமோ, அவற்றை எல்லாம் மிக சாதாரணமாக தான் பார்க்கிறோம். எதையெல்லாம் சாதரணமாக எடுத்துக் கொள்ள வேண்டுமோ அதையெல்லாம் தான் மிக தீவிரமாக பார்க்கிறோம்.
உதாரணமாக நமது உடல்நிலை அக்கறை மற்றும் கிரிக்கெட், சினிமா.
நமது உடல்நலத்தின் மீதான அக்கறை தான் மிகவும் அவசியமானது. ஆனால், நமது உடல் வெளிப்படுத்தும் அறிகுறிகளை தான் கண்டுக்கொள்வதே இல்லை என்பது தான் உண்மை. கிரிக்கெட் மற்றும் சினிமாவின் வெற்றி, தோல்வியினால் நமக்கு எந்த பிரயோசனமும் இல்லை. ஆனால், அதை மிக தீவிரமாக கண்காணித்து, எதிர்ப்பையும், ஆதரவையும் அளித்து வருகிறோம்.
இது தான் இன்றைய நாளில் நடக்கும் மிகப்பெரிய மோசமான விஷயங்கள். நமது உடல் வெளிப்படுத்தும் சில அறிகுறிகள் நாளை நமது உயிருக்கு கூட வினையாக மாறலாம். எனவே, எந்தெந்த அறிகுறிகளை நாம் சாதாரணமாக நினைத்து விடக் கூடாது என இனிப் பார்க்கலாம்…
தூக்கமின்மை
சரியான அளவு தூக்கம் அல்லது சரியான நேரத்திற்கு தூங்காமல் இருப்பது போன்ற பழக்கம் இருந்தால் நீங்கள் கட்டாயம் மருத்துவரை காண வேண்டும். தூக்கமின்மையின் காரணத்தால் ஸ்ட்ரோக் அபாயம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.
தூக்கமின்மை பாதிப்புகள்
தூக்கமின்மை காரணத்தால் இரத்த கொதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம், இதய கோளாறுகள் ஏற்படலாம், உடல் சோர்வு, மயக்கம் போன்றவை ஏற்பட நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, தூக்கமின்மையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
மன அழுத்தம்
இந்நாட்களில் நீரிழிவை போல, மன அழுத்தமும் இளம் வயதிலே ஏற்படும் பிரச்சனை என்றாகிவிட்டது. மன அழுத்தம் உங்கள் மனநிலை மற்றும் மூளையை வெகுவாக பாதிக்கும் விஷயமாகும்.
நடுவயது உடல்நலம்
இன்றைய நாட்களில் 35 – 45 வயதினுள் பலருக்கும் நிறைய உடல்நல பாதிப்புகள் ஏற்பட காரணமாக இருப்பதே இந்த மன அழுத்தம் தான். எனவே, மன அழுத்தத்தை சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம்.
காற்று ஏற்றப்பட்ட பானங்கள்
நாம் பலமுறை கூறும் ஓர் விஷயம் தான் காற்று ஏற்றப்பட்ட பானங்கள், சோடா பானங்கள். இவற்றை அதிகம் உட்கொள்வதால் உடல்நலத்திற்கு நிறைய கேடுகள் விளைகின்றன.
காற்று ஏற்றப்பட்ட பானங்கள் – தீய விளைவுகள்
இந்த பானங்களினால், கணையத்தில் கோளாறுகள் ஏற்படுகின்றன, இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பு, எலும்புகளின் வலிமை குறைவு, புற்றுநோய் கட்டி வளரும் வாய்ப்புகள் கூட இருப்பதாய் கூறப்படுகிறது.
வைட்டமின் டி குறைபாடு
நமது உடலுக்கும், உடற்திறனுக்கும் வைட்டமின் டி சத்து மிகவும் அத்தியாவசியமாகும். காலை சூரிய உதயத்தின் போது நடைபயிற்சி செய்வதால், சூரிய ஒளி நமது உடலில் படுவதால் வைட்டமின் டி சத்து நிறைய கிடைக்கிறது.
வைட்டமின் குறைபாடு விளைவுகள்
வைட்டமின் டி குறைப்பாட்டினால் நோய் எதிர்ப்பு மண்டலம் தான் வெகுவாக பாதிக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்தில் குறைபாடு ஏற்பட்டால், சிறு, சிறு தொற்றுகள் கூட விரைவாக தொற்றிக் கொள்ளும் அபாயம் இருக்கிறது. எனவே, வைட்டமின் டி குறைப்பாட்டை சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம்
Average Rating