கள்ளநோட்டு தொழிற்சாலை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் ரகசிய மாக இயங்கி வந்த கள்ளநோட்டு அச்சடிக்கும் தொழிற்சாலையை மாநில குற்றப்புலனாய்வு போலீசார் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாநில குற்றப்புலனாய்வுத்துறை கூடுதல் டி.ஜி.பி. சுப்பிரமணியன், ஐ.ஜி. திரிபாதி, டி.ஐ.ஜி.குணசீலன், சூப்பி ரண்டு பவானீஸ்வரி ஆகியோருடைய உத்தரவின் பேரில் நாமக்கல் குற்றப் புலனாய்வு இன்ஸ்பெக்டர் ராஜன், சேலம் குற்றப்புலனாய்வு இன்ஸ் பெக்டர் உதயகுமார் ஆகியோரது தலைமையில் தனிப்படை அமைக்கப் பட்டு கண்காணிக்கப்பட்டது. இதில் விழுப்புரம் மாவட்டம் சங்கரா புரம் அருகே மூங்கில்துறைப்பட்டு காவல் சரகத்திற்கு உட்பட்ட அருளம் பாடி என்ற கிராமத்தில் ஒரு வீட்டில் கள்ளநோட்டு அச்சடிக்கும் தொழிற் சாலை இயங்கி வருவது தெரியவந்தது. இதையடுத்து, அருளம்பாடி கிராமத் தில் விநாயகர்கோயில் தெருவில் உள்ள அந்த வீட்டில் குற்றப்புலனாய்வு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ரூ. 1000, ரூ. 500, ரூ. 100, ரூ. 20 ஆகியவற்றின் கள்ள நோட்டு கள் அங்கு அச்சடிக்கப்படுவது தெரிய வந்தது. அங்கிருந்து 70 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள், 180 ஐநூறு ரூபாய் நோட்டுக்கள், 448 நூறு ரூபாய் நோட்டுக்கள் ஆகியவையும், ஒரு பக்கம் மட்டும் அச்சடித்த நிலையில் ஐநூறு ரூபாய் நோட்டுக்களும் பறி முதல் செய்யப்பட்டன. மொத்தம் 2 லட்சத்து 4 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுக்கள் சிக்கின.
கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத் தப்பட்ட காகிதங்கள், ஒரு கலர் ஜெராக்ஸ் பரிண்டர், ஒரு கட்டிங் மிஷின், ஹீட்டர், 3 ஸ்கிரீன் பிரிண்டிங் மிஷின்கள், 25 பிரிண்டிங் இங்க் கார்ட் ரிட்ஜ்கள், ஒரு எலெக்ட்ரிக்கல் அடாப் டர், ஒரு எலெக்ட்ரிக்கல் ஜங்ஷன் பாக்ஸ், மை, பச்சை மற்றும் வெள்ளை நிற ஸ்டிக்கர் டேப் ரோல்கள் ஆகிய வற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கள்ளநோட்டு அச்சடித்ததாக பூந்த மல்லியைச் சேர்ந்த ரகு (வயது 34), அருளம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ராஜா (வயது 30), சின்னதுரை (வயது 24) ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதனை நிருபர்களிடம் தெரிவித்த குற்றப்புலனாய்வு போலீஸ் சூப்பி ரெண்டு பவானீஸ்வரி, கள்ள நோட்டு வழக்கில் ரகு ஏற்கனவே சென் னையில் பிடிபட்டவன் என்று கூறினார்.
மேலும் அவனிடம் நடத்திய விசாரணையில், ரகு நான்கைந்து ஆண்டு களாக கள்ளநோட்டு அச்சடிப்பதில் ஈடுபட்டு வந்திருப்பது தெரியவந்தது என்றும், இவனிடமிருந்து கள்ளநோட் டுக்களை பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வந்து வாங்கிச் செல்வது வழக்கம் என்றும் தெரியவந்துள்ளது. வெளி மாநிங்களுக்கும் கள்ளநோட் டுக்களை அவன்
விநியோகித்து இருக்கிறானா? என்பது குறித்தும் விசாரித்து வருவதாக கூறினார்.
ஒரு கோடி ரூபாய் அளவுக்கு கள்ள நோட் டுக்களை அச்சடித்து ரகு புழக்கத்தில் விட்டிருக்கக் கூடும் என்றும் கூறிய பவானீஸ்வரி, கள்ள நோட்டுக்களை அவன் எவ்வாறு தயாரித்தான் என்பதை விவரித்தார்.