90 மீற்றர் உயரத்தில் 366 மீற்றர் நீளமான தொங்குபாலம்…!!

Read Time:1 Minute, 24 Second

timthumbஜேர்மனியிலுள்ள நீளமான தொங்குபாலமொன்று அதில் நடப்பவர்களை பீதிக்குள்ளாக்குகிறது.

எனினும், த்ரில்லான அனுபவத்துக்காக அப்பாலத்தில் நடந்து செல்வதற்கு உல்லாசப்பயணிகளும் உள்ளூர் மக்களும் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஜேர்மனியின் மேற்குப் பிராந்தியத்தில் மோர்ஸ்டோர்வ் மற்றும் சோஸ்பேர்க் ஆகிய இரு இடங்களுக்கிடையில் காட்டுப் பகுதியொன்றில் இந்த தொங்குபாலம் அமைக்கப்பட்டுள்ளது.

366 மீற்றர் நீளமான இப்பாலம் தரையிலிருந்து 90 மீற்றர் உயரத்தில் உள்ளது.

இப்பாலத்தின் நிர்மாண நடவடிக்கைககள் கடந்த மே மாதம் ஆரம்பிக்கப்பட்டு 130 நாட்களில் பூர்த்தியானமை குறிப்பிடத்தக்கது.

தற்போது அப்பகுதியில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பிரதான விடயமாக இப்பாலம் விளங்குகிறது.

வருடாந்தம் 180,000 சுற்றுலாப் பயணிகளை இப்பாலம் ஈர்க்கும் என உள்ளூர் சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வங்காள தேசத்தில் பாதிரியார் மீது மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல்…!!
Next post புதுப்பெண் சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது…!!