(படங்கள்) கடும் புயலில் சிக்கி தவித்த மக்கள்: இரக்கமின்றி பொருட்களை திருடிச் சென்ற கும்பல்…!!

Read Time:2 Minute, 43 Second

flsh_flood_loot_005பிரான்ஸ் நாட்டில் பெய்த கண மழையில் சிக்கி 17 பேர் இறந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட வீடுகளிலிருந்து பொருட்களை திருடிச் சென்ற ஒரு கும்பலை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தென் கிழக்கு பிரான்ஸ் பகுதியில் உள்ள கேன்ஸ் நகரில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு முதல் புயலுடன் பலத்த மழை பெய்ததால் நகருக்குள் வெள்ளம் புகுந்தது.

பெரும் பொருட்சேதாரங்களை ஏற்படுத்திய இந்த இயற்கை சீற்றத்திற்கு 17 பேர் வரை பலியானதுடன் 4 பேர் இதுவரை கண்பிடிக்கப்படவில்லை.

வெள்ளத்தில் சிக்கி மக்கள் அவதியுற்று வந்த நேரத்தில் அந்த பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் பாதிக்கப்பட்ட வீடுகளிலிருந்து பொருட்களை திருடும் முயற்சியில் ஈடுப்பட்டனர்.

இந்த தகவலை அறிந்ததும் மீட்பு பணியில் ஈடுப்பட்டிருந்த பொலிசார் உடனடியாக திருட்டு கும்பலை இனங்கண்டு கைது செய்தனர்.

நபர்களிடமிருந்து பொருட்களை பறிமுதல் செய்த பொலிசார், திருடியதாக உறுதிப்படுத்தப்பட்ட 9 பேரை இன்று நீதிமன்றத்தின் முன் நிறுத்தவுள்ளனர்.

மேலும், பொருட்களை திருடியதாக சந்தேகப்படும் 7 நபர்களை பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த கைது சம்பவம் தொடர்பாக பேசிய பிரான்ஸ் நாட்டு உள்துறை அமைச்சரான Bernard Cazeneuve, வெள்ளத்தில் சிக்கி நபர்கள் உயிரிழந்துள்ள இந்த நேரத்திலும் இரக்கமின்றி திருடுச்சம்பத்தில் ஒரு கும்பல் ஈடுப்பட்டிருப்பது அவர்கள் பழி பாவங்களுக்கு அஞ்சாதவர்கள் என்பதையே காட்டுகிறது.

பொருட்களை திருடியது நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மீது கடுமையான தண்டனை விதிக்கப்படும் என கூறியுள்ளார்.

பின்னர், மீட்பு பணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் பொலிசார் மற்றும் தீயணைப்பு துறை வீரர்களை அவர் வெகுவாக பாராட்டியுள்ளார்.

flsh_flood_loot_003

flsh_flood_loot_004

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தவறான நம்பரில் ஒலித்த குரல்: இதயத்தில் தொடங்கி கண்களில் முடிந்த காதல் திருமணம்…!!
Next post மருத்துவமனையின் அலட்சியத்தால் நிகழ்ந்த விபரீதம்: உயிருடன் இருக்கும் தாயாருக்கு ஈமச்சடங்கு செய்ய முயன்ற மகள்…!!