சீனாவில் அலுவலகப்பணம் ரூ.960 கோடியை திருடிய தபால் அதிகாரி

Read Time:1 Minute, 32 Second

சீனாவில் போஷன் என்ற நகரில் உள்ள தபால் நிலையத்தின் தலைமை அதிகாரியாக இருப்பவர் ஹெ லிகியோங். வயது 43. இவர் தபால் அலுவலகத்தில் தங்கள் சேமிப்புகளை டெபாசிட்டு செய்த ஆயிரக்கணவர்களின் பணத்தை இவர் கடந்த 3 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக திருடி வந்தார். இவர் திருடிய தொகையின் மொத்த மதிப்பு ரூ.960 கோடி ஆகும். இப்படி திருடிய தொகையில் ஒரு பகுதியை தன் கடனை அடைப்பதற்கு பயன்படுத்தினார். மீதி பணத்தில் ஒரு பகுதியை நிலங்களை வாங்கி விற்பதற்கும் எஞ்சியதை தன் பெயரில் முதலீடு செய்யவும் பயன்படுத்தினார். கடந்த ஆகஸ்டு மாதம் இவர் செய்யும் திருட்டுத்தனம் இவரது அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர்களில் ஒரு சிலருக்கு தெரியவந்தது. அவர்களில் ஒருவர் இதை டெபாசிட்தாரர்களிடம் சொல்லி பணத்தை திருப்பி கேட்கும்படி தூண்டினார். இதை பார்த்த லிகியோங், அவரை தாக்கினார். இதில் போலீசார் இவரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தியபோது தான் இவர் செய்த திருட்டுத்தனம் வெளி உலகத்துக்கு தெரியவந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தமிழர் புனர்வாழ்வுக் கழக சொத்துக்களை அமெரிக்கா முடக்க முடிவு
Next post 14 வயது சிறுமியை ஏமாற்றி கற்பழித்த இந்திய மாலுமிக்கு 15 மாத ஜெயில் தண்டனை