விடுதலைப்புலிகளுடன் துப்பாக்கி சண்டை இலங்கை ராணுவத்தினர் 12 பேர் சாவு

Read Time:4 Minute, 10 Second

Slk1.jpgஇலங்கையில், விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில்,12 பேர் இறந்தனர். இலங்கையில் திரிகோணமலை பகுதியில், விடுதலைப்புலிகளின் முகாம்களின் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினார்கள். இதில் முகாமில் இருந்த ஒருவர் இறந்தார். மேலும் ஒருவர் காயம் அடைந்தார். இந்த நிலையில் மட்டக்களப்பு பகுதியில் உள்ள வாகநேரி என்ற தமிழர்கள் கைவசம் இருக்கும் பகுதிக்குள், இரவு நேரத்தில் ராணுவத்தினர் 60 பேர்நுழைந்தனர்.

உடனே விடுதலைப்புலிகள் 200 பேர் ஆயுதங்களுடன் அவர்களை எதிர்த்தனர். இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த துப்பாக்கி சண்டை பற்றி விடுதலைப்புலிகளின் கிழக்குபகுதி அரசியல் பிரிவு தலைவர் கயல் விழி நிருபர்களிடம் கூறியதாவது:-

விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் ராணுவத்தினர் 22 பேரும், விடுதலைப்புலிகள் 2 பேரும் இறந்தனர். மேலும் பல ராணுவத்தினரை நாங்கள் சிறை பிடித்து வைத்து இருக்கிறோம். இந்த சம்பவத்தில் 5 விடுதலைப்புலிகள் காயம் அடைந்துள்ளனர்.

போர் நிறுத்தம் ஏற்பட்ட பின், இலங்கையில் நடந்த தாக்குதலில் அதிக அளவில் ராணுவத்தினர் பலியாகி இருப்பது இந்த சம்பவத்தில் தான். இவ்வாறு கயல் விழி கூறினார்

இந்த தகவலை ராணுவத்தினர் மறுத்து இருக்கிறார்கள். ராணுவ தளபதி பிரசாத் சமரசின்கே இதுபற்றி கூறுகையில், “இந்த துப்பாக்கி சண்டையில் விடுதலைப்புலிகள் கூறுவதுபோல் 22 ராணுவத்தினர் இறக்கவில்லை. 12 பேர்தான் இறந்துள்ளனர். 10 பேர் காயம் அடைந்து இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

இந்த சம்பவம் பற்றி செஞ்சிலுவை சங்கத்தினர் கூறுகையில்,”நாங்கள் 12 ராணுவத்தினரின் உடல்களை பார்த்தோம். விடுதலைப்புலிகள் 4 பேர் இறந்து கிடந்தனர். இவற்றை அவரவர் பிரதிநிதிகளிடம் 15-ந்தேதி (இன்று) ஒப்படைப்போம்” என்றனர்.

போலீஸ்காரர் விடுதலை

இதற்கிடையே நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டு தவித்த விடுதலைப்புலிகளின் ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டரை, மருத்துவ சிகிச்சைக்காக, கொழும்பு கொண்டு செல்ல ,அதிபர் ராஜபக்சே அனுமதி கொடுத்துஇருக்கிறார். இதைத் தொடர்ந்து, விடுதலைப்புலிகளின் ஜெயிலில் இருந்த ஒரு போலீஸ்காரரை, விடுதலைப்புலிகள் நேற்று விடுதலை செய்தனர்.

போர் மூளுமா?

இலங்கையில் 2002-ம் ஆண்டு போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஆனால் இதுவரை எந்தவித உறுதியான ஒப்பந்தமும் கையெழுத்தாக வில்லை. மாறாக இரு தரப்பினரும் அடிக்கடி மோதிக்கொள்ளும் சம்பவங்கள்தான் அதிகரித்து வருகின்றன.

இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை 700 பேர், மோதலில் இறந்து இருக்கிறார்கள். இதனால் போர் நிறுத்தம் என்பது கேள்விக்குறியாகி விடுமா? என்ற நிலை நீடித்து வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இஸ்ரேல் தாக்குதலுக்கு லெபனான் பதிலடி ஏவுகணை வீசி போர்க்கப்பல் தகர்ப்பு
Next post போலந்து நாட்டில் புதிய பிரதமர் பதவி ஏற்றார்