அமெரிக்காவில் தோல் புற்றுநோயாளிக்கு தலையில் இருந்து மூக்கு தயாரிப்பு: நிபுணர்கள் சாதனை…!!

Read Time:1 Minute, 41 Second

e3cc3c2f-91d3-41db-9989-db70dc41c66d_S_secvpfஅமெரிக்காவில் தோல் புற்றுநோயாளிக்கு தலையில் இருந்து மூக்கு தயாரித்து நிபுணர்கள் சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்காவில் வாஷிங்டனை சேர்ந்த பெண் பிரீ பவுனர் (28). கடந்த 2013–ம் ஆண்டில் இவரது மூக்கில் சிறிய குறை ஏற்பட்டது. இதனால் சில அசவுகரியங்கள் ஏற்பட்டது.

எனவே, இது புற்றுநோயாக இருக்கலாம் என சந்தேகம் அடைந்து டாக்டரிடம் பரிசோதனை செய்தார். அவரை பரிசோதித்த டாக்டர் இது புற்றுநோய் அல்ல என்று கூறி விட்டார். மேலும் சூரிய குளியலில் ஈடுபட்டால் குணப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.

ஆனால், அவருக்கு உடலில் தோல் புற்றுநோய் ஏற்பட்டது. நாளடைவில் அந்த மூக்கில் இருந்த குறை பெரிதாகி முற்றிலும் அழிந்து விட்டது. அதை தொடர்ந்து ஆபரேசன் மூலம் அவரது மூக்கு முற்றிலும் அகற்றப்பட்டு விட்டது.

இந்த நிலையில் அவருக்கு புதிதாக மூக்கு உருவாக்க நிபுணர்கள் முடிவு செய்தனர். அதற்காக அவரது தலையில் மண்டையோட்டின் மேல் பகுதியில் இருந்து மூக்கு உருவாக்கியுள்ளனர். தற்போது இந்த மூக்கு அவருக்கு ஆபரேசன் மூலம் பொருத்தப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அணுகுண்டிலும் அழியாமல் ஜப்பானிலிருந்து அமெரிக்கா வந்த அதிசய மரம்! (வீடியோ இணைப்பு)…!!
Next post மட்டக்களப்பில் சிறுமியொருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் கைது..!!