பொலிஸ் தலைமையகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சிறுவன்: சுட்டு வீழ்த்திய பொலிசார் (வீடியோ இணைப்பு)

Read Time:2 Minute, 59 Second

aus_gunshoot_007அவுஸ்திரேலியாவில் பொலிஸ் தலைமையகத்தில் புகுந்து 15 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் அதிகாரியை சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பார்ராமட்டாவில் பொலிசாரின் தலைமையகம் உள்ளது.

இந்நிலையில் அதனுள் புகுந்த 15 வயது சிறுவன் ஒருவன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் குர்ட்டிஸ் செங் என்ற பொலிஸ் அதிகாரியின் தலையில் சுட்டுள்ளான். இதில் செங் உயிரிழந்தார்.

பின்னர் அங்கிருந்த உற்சாக கூச்சல் போட்டபடியே வெளியே வந்த சிறுவன், பொலிஸ் தலைமையகத்தை நோக்கி மீண்டும் சுட தொடங்கினான்.

இதையடுத்து அங்கிருந்த பொலிசார் சிறுவனை சுட்டு வீழ்த்தினர். பின்னர் இந்த சம்பவம் &குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, தாக்குதல் நடத்திய சிறுவனின் பெயர் ஃபர்கத் காலில் முகமது ஜாபர் என்று தெரியவந்துள்ளது.

அருகில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வரும் அவன் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் மசூதியில் தொழுகை நடத்திவிட்டு வந்ததும் தெரியவந்தது.

சிறுவனின் சகோதரர் இந்த விவகாரம் தொடர்பாக பொலிசாரை தொடர்புகொள்ள முயன்றதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவனின் சகோதரி அவுஸ்திரேலியாவில் இருந்து இஸ்தான்புலுக்கு தப்பி சென்றுள்ளதாகவும், அங்கிருந்து அவர் சிரியா அல்லது ஈராக் நாடுகளுக்கு செல்லக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அவுஸ்திரேலியா பிரதமர் மால்கொம் ட்ர்ன்புல் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் இரத்தத்தை உறைய வைப்பதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அவுஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதிய படங்களில் கவர்ச்சியாக நடிக்கும் ஸ்ரீதிவ்யா…!!
Next post அளவுக்கதிகமாக பொரித்த மீன் சாப்பிடாதீர்கள்…!!