நயன்தாரா இப்போ நல்ல டெக்னீஷியன்

Read Time:1 Minute, 55 Second

nayan5_2.jpgதமிழ், தெலுங்கு என இருமொழி ரசிகர்கள் மத்தியில் நயன்தாராவுக்கென்று ஒரு நாற்காலி நிரந்தரமாகிவிடடது. ‘பில்லா’ ‘யாரடி நீ மோகினி’ என கோடம்பாக்கத்தை மீண்டும் மயக்கத்திற்கு உள்ளாக்கி வருகிறார். இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய் கவர்ந்தற்று” என திருக்குறளை சொல்லுமளவிற்கு தமிழில் தேர்ச்சி கண்டுள்ளார். இந்த குறளை இப்போது சொல்லும் அவசியம் என்ன என்கிறீர்களா? நாம் கேட்ட கேள்விதான் அதற்கு காரணம். காதலில் ஏற்பட்ட பிரிவை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்? இதுதான் அந்தக் கேள்வி. “நல்லது இருக்கும்போது கெட்டதை எதுக்கு எடுத்துக்கனும். நான் பழசையெல்லாம் மறந்துட்டேன்” என்றபடிதான் அந்த குறளை மேற்கோள் காட்டினார். நடிப்பு தவிர வேறு எதிலாவது ஆர்வம் காட்டுகிறீர்களா. யெஸ். நடிக்கும் போது லைட் எங்கே வருது, கேமிரா கோணம், மூவ்மெண்ட்ஸ் எப்படி இருக்கு போன்ற அடிப்படை விஷயங்களெல்லாம் நடிகர், நடிகைகளுக்கு அவசியம் தெரிஞ்சிருக்கனும். அந்த வகையில் இப்போ நான் அந்த டெக்னிக்கல் விஷயங்களை கற்றுக் கொண்டு வருகிறேன். நான் நடிக்கும் படங்களின் கேமராமேன்கள் எனக்கு அதுபற்றி சொல்லிக்கொடுக்கிறாங்க” என்று கைகளை பிரித்து கோணம் பார்க்க ஆரம்பிக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தமிழ்ச்செல்வனுக்குப் பிரபாகரன் “மாமனிதர்” கௌரவம் வழங்காதது ஏன்?
Next post புலிகள் விமானம் ஊடுருவல்