இஸ்ரேல் தாக்குதலுக்கு லெபனான் பதிலடி ஏவுகணை வீசி போர்க்கப்பல் தகர்ப்பு

Read Time:2 Minute, 41 Second

Lepanan.Map.jpgஇஸ்ரேல் நாட்டை சேர்ந்த 2 ராணுவ வீரர்களை லெபனானில் உள்ள அரசு ஆதரவு ஹிஸ்புல்லா இயக்கத் தினர் கடத்திச்சென்று விட்ட னர். ஏற்கனவே இஸ்ரேலும் லெபனானும் எதிரி நாடுகள். எனவே இந்த விவகாரத்தை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. பெய்ரூட் நகரில் உள்ள விமான நிலையம் மீது இஸ்ரேல் விமானங்கள் சரமாரி குண்டு வீசியது.

பெய்ரூட் நகரத்தில் உள்ள 2 மின்சார நிலையங்கள் மீதும் இஸ்ரேல் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன.இதில் அந்த மின்சார நிலையங் கள் தரைமட்டம் ஆனது. பெய்ரூட் நகரமே இருளில் மூழ்கியது.

3-வது நாளாக இந்த தாக்குதல் நீடித்தது. பெய்ரூட் விமான நிலையம் இனி பயன் படுத்த முடியாத அளவுக்கு தரைமட்டமாகி விட்டது. இஸ்ரேலின் போர்க்கப்பல் களும் லெபனானை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது. பீரங்கி படையும் எல்லையை தாண்டி லெபனான் பகுதிக் குள் நுழைந்தது.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு லெபனான் பதிலடி கொடுக்க தொடங்கி இருக்கிறது. லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேலின் வடக்கு பகுதிகளில் சரமாரி ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தினார்கள். 50-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் வீசப்பட்டன.

லெபனான் மீதும் இஸ்ரேல் கடல் பகுதியில் இருந்து ஏவு கணை வீசிய போர்க்கப்பல் மீதும் லெபனான் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ஏவுகணை வீசி எதிர்தாக்குதல் நடத்தினார்கள். இதில் இஸ்ரேலின் போர்க் கப்பல் தகர்க்கப்பட்டது. அதில் 72 இஸ்ரேல் வீரர்கள் இருந்தனர். அவர்கள் கதி என்ன ஆனது என்பது தெரிய வில்லை.

இந்த தாக்குதலில் எகிப்து நாட்டுக்கு சொந்தமான ஒரு கப்பலும் பலத்த சேதம் அடைந்தது. கடந்த 3 நாட்களாக நடந்து வரும் தாக்குதலில் இஸ்ரேல் மற்றும் லெபனானை சேர்ந்த பொதுமக்கள் 73 பேர் பலியாகி விட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post லெபனான் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு: பெய்ரூட் நகரம் பற்றி எரிகிறது;
Next post விடுதலைப்புலிகளுடன் துப்பாக்கி சண்டை இலங்கை ராணுவத்தினர் 12 பேர் சாவு