விஜயகாந்த் வலியுறுத்தல்

Read Time:4 Minute, 10 Second

vijaykanth.jpgரேஷன் அரிசி கடத்தல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏழைகளுக்கு கிலோ ரூ.2 விலையில் அரிசி வழங்கப்படும் என்று அறிவித்து திமுக ஆட்சியைப் பிடித்தது. ஆனால் ரேஷன் அரிசி உண்மையில் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பதைப் பார்க்கும்போது அதிர்ச்சி அளிக்கிறது. அண்மையில் புதுச்சேரியில் தமிழக அரசின் ரேஷன் அரிசி ரெயிலில் கடத்தப்படுவதை அவர்கள் பிடித்ததிலிருந்து இது அம்பலமாகி இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் அரிசி, விழுப்புரம் வழியாக புதுச்சேரி வருகிறது. அங்குள்ள கிடங்குகளில் பதுக்கப்பட்டு பின்னர் ஆந்திரம், கேரளம் போன்ற மாநிலங்களுக்கு ரெயில்கள் மூலம் செல்லுகிறது. இதற்கு வங்கிகளும் கோடிக்கண்க்கில் பணம் வழங்குகின்றன. பல ஆண்டுகளாக இதன் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் அன்பழகன் இந்தத் திட்டத்தின் மூலம் ரேஷன் அரிசி வழங்குவதில் ஆண்டுக்கு ரூ.1700 கோடி இழப்பு ஏற்படுகிறது என்று கூறியுள்ளார்.

ரேஷன் கடைக்கான அரிசி கடத்தப்படுகிறது என்றால், தமிழக அரசின் உணவுத்துறைக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. பொதுவாக சாலையில் செல்லும்போது செக்போஸ்டுகள் வைத்து சோதனை போடும் போலீசார் தமிழ்நாடு எங்கும் இருந்து புதுச்சேரிக்கு வெள்ளம் போல் கடத்தல் அரிசி பாயும்பொழுது எங்கே போனார்கள்? ரெயிலில் கொண்டு செல்ல பல விதிமுறைகள் இருக்கும் போது டன் கணக்கில் அரிசி கடத்துவது என்றால் ரெயில்வே துறைக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை.

மாணவன் படிப்பதற்கு பண உதவி கேட்டாலே மறுக்கும் வங்கிகள் எந்த முகாந்திரமும் இல்லாமல் கோடிக்கணக்கான ரூபாய்கள் கடத்தல்காரர்களுக்கு வழங்கி உள்ளது என்றால் அவர்களும் இதற்கு உடந்தை என்பது புலனாகிறது. இந்தப்பணமும் இனி திரும்ப வரப்போவதில்லை.

இந்த அரிசி கடத்தலில் திமுக அரசு, மத்திய அரசின் ரெயில்வேத்துறை, வங்கிகள், இவற்றின் பின்னணியில் உள்ள அதிகாரிகள் மற்றும் அரசியல் முக்கியஸ்தர்கள் ஆகியவை பற்றி தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.

ரேஷன் அரிசியையே நம்பி பிழைக்கும் எத்தனையோ ஏழைகளுக்கு மலிவு விலையில் அரிசி வழங்கும் திட்டத்தைக் கூட ஊழல் பெருச்சாளிகள் விட்டு வைக்கவில்லை. ஓய்வுக்கு ஓய்வு தந்துவிட்டு ஓயாமல் உழைப்பதாக சொல்லிக் கொள்பவர்கள் ஊழலுக்கு ஓய்வுதந்து ஏழை மக்களின் நல்ல வாழ்வில் அக்கறை செலுத்துவார்களா? என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இந்திய சூப்பர் கம்ப்யூட்டர்
Next post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…