முஷாரப்புக்கு பிரவுன் கோரிக்கை

Read Time:1 Minute, 27 Second

musharraf.jpgபாகிஸ்தானில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர நிலையை உடனடியாக திரும்ப பெறுமாறு அந்நாட்டு அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன் கோரிக்கை விடுத்துள்ளார். லார்டு மேயர் ஆண்டு உரையாற்றிய பிரவுன், பாகிஸ்தானில் கடந்த 9 நாட்களாக அமலில் இருக்கும் அவசர நிலை திரும்ப பெறப்பட வேண்டும் என்றும், அங்கு திட்டமிட்டபடி வரும் ஜனவரி மாதம் தேர்தல் நியாயமானதாகவும், அமைதியாகவும் நடைபெற வேண்டும் என்றும் கூறினார். ஈரான் மீது கூடுதலான பொருளாதார தடைகள் விதிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார். அணு ஆயுத நடவடிக்கைகளை ஈரான் உடனடியாக நிறுத்திக் கொள்ளாவிட்டால் பொருளாதார தடைகளை கடுமையாக்க ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐநாவை நிர்ப்பந்திக்க போவதாக பிரவுன் எச்சரித்தார். அமெரிக்காவுடன் உறவுகள் மேலும் வலுவடையும் என்றும் பிரவுன் தனது உரையில் குறிப்பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post திருமணம் முடிந்ததும் விவகாரத்து
Next post 7 விடுதலைப்புலிகள் பலி