லெபனான் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு: பெய்ரூட் நகரம் பற்றி எரிகிறது;

Read Time:3 Minute, 4 Second

Israel.flag.jpgலெபனான் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு: பெய்ரூட் நகரம் பற்றி எரிகிறது; பொதுமக்கள் 44 பேர் பலி இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே மோதல் அதிகரித்து வந்த நிலையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் லெபனான் மீது இஸ்ரேல் நேற்று குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. லெபனானில் உள்ள பெய்ரூட் விமான நிலையம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரி குண்டு வீசியதில் அந்த விமான நிலையம் தீப்பிடித்து எரிந்தது. இதில் பொதுமக்கள் 27 பேர் பலியானார்கள். நேற்று இரவு முதல் மீண்டும் வீசின. விடிய விடிய இந்த தாக்குதல் நடந்தது. இன்று காலையும் இந்த தாக்குதல் நீடித்தது. பெய்ரூட் விமான நிலையத்துக்கு சென்றும் சாலைகள் அனைத்தும் தகர்க்கப்பட்டன.

லெபானுக்கு உதவியாக சிரியாக படைகளை அனுப்பும் என்பதால் சிரியா மீதும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது. சிரியாவின் டெமாஸ்கஸ் நகரில் இருந்து லெபனானின் பெய்ரூட் நகருக்கு செல்லும் பாதைகள், சாலை நெடுகிலும் உள்ள பாலங்களை தகர்த்து வருகிறது. பெய்ரூட் விமான நிலையம் ஏற்கனவே மூடப்பட்டது.

லெபனான் மீது இஸ்ரேல் கடந்த 2 நாட்களாக நடத்திய தாக்குதலில் பலியானார்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்து விட்டது.

பெய்ரூட் மட்டுமின்றி அதன் புறநகர் பகுதிகளிலும் இன்று இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. விமானங்கள் சரமாரி குண்டுவீசியது. பீரங்கிகளிலும் தாக்குதல் நடத்தியது. கடற்படை பகுதிகளிலும் தாக்குதலை தொடர்ந்தது. சரமாரி ஏவுகணை வீசப்பட்டதில் ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமானது. பெய்ரூட் நகரம் பற்றி எரிகிறது. இஸ்ரேலின் முப்படை தாக்குதலை தொடர்ந்து லெபனானும் எதிர்தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

லெபனான் மீது இஸ்ரேல் வான்வெளி, தரைவழி, கடல்வழி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருவதால் லெபனானில் உள்ள அமெரிக்கதூதர் அலுவலக ஊழியர்களை உடனடியாக நாடு திரும்ப அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. லெபனானுக்கு செல்ல வேண்டாம் என்றும் தனது நாட்டு மக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post விமானத்தில் வந்த எத்தியோப்பிய நாட்டு ராஜநாகம்!
Next post இஸ்ரேல் தாக்குதலுக்கு லெபனான் பதிலடி ஏவுகணை வீசி போர்க்கப்பல் தகர்ப்பு