நாயை மணந்த வாலிபர்

Read Time:2 Minute, 18 Second

ani_dog-mirror.gifநாய்களைக் கொன்றதால் ஏற்பட்ட சாபத்திலிருந்து விடுபடுவதற்காக சிவகங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் நாயை திருமணம் செய்து கொண்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் மானா மதுரையை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது33). இவர் கடந்த 15 ஆண்டு களுக்கு முன்பு விளையாட்டாக சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு நாய்களை அடித்து கொன்று மரத்தில் கட்டித் தொங்க விட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு செல்வ குமாரின் இரண்டு கால்களையும் அசைக்க முடியாமல் தவித்து வந்துள்ளார். மேலும் இவருக்கு காது களும் கேட்காத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஜோதிடர் ஒருவரை செல்வகுமார் அணுகியுள்ளார். செல்வகுமாரை அந்த நாய்கள் சபித்து விட்டதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும் இதற்கு பரிகாரமாக அவர் நாய் ஒன்றை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அந்த ஜோதிடர் யோசனை கூறியுள்ளார். இந்த யோசனையை ஏற்று செல்வகுமார் நாய் ஒன்றை திருமணம் செய்து கொண்டுள்ளார். மானா மதுரையில் உள்ள கோயில் ஒன்றில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. முன்னதாக அந்த நாய்க்கு புடவை அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டுள்ளது. நாய்களை கொன்று சாபத்துக்கு உள்ளான செல்வகுமார், தாம் திருமணம் செய்துகொண்டுள்ள நாயை கடைசி வரை காப்பாற்றப்போவதாக உறுதி அளித்துள்ளார். நாய்க்கும், வாலிபருக்கும் நடை பெற்றுள்ள இந்த வினோத திருமணம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை மறக்க முடியவில்லை
Next post 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை