சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஏழு பேர் கைது!!

Read Time:1 Minute, 23 Second

750167824Untitled-1பொகவந்தலாவ – டியன்சின் கெசல்கமுவ ஒயா ஆற்றில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஏழுபேரை பொகவந்தலாவ பொலிஸார் இன்று அதிகாலை 04.00 மணியளவில் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொகவந்தலாவ பொலிஸாரால் மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பின் போதே, இவர்கள் ஏழுபேரும் கைது செய்யபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யபட்டவர்கள் பொகவந்தலாவ தெரேசியா தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, காசல்ரீ நீர் தேக்கத்திற்கு கேசல்கமுவ ஒயா ஆற்றில் இருந்து செல்லும் நீர் மாசடைந்து காணபடுவதாக இலங்கை மின்சாரசபை பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளமையும் குறிப்பிடத்கக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவின் யோசனையை செயற்படுத்தும் வல்லமை இருக்கின்றது – மங்கள் சமரவீர!!
Next post தங்கம் கடத்திச் சென்ற இலங்கையர் சென்னையில் கைது!!