இரத்தினக்கல் அதிகார சபைக்கு எதிராக மின்சார சபை பொலிஸில் முறைப்பாடு!!

Read Time:2 Minute, 33 Second

1965520492CEB-NEWபொகவந்தலாவையில் காசல்ரீ நீர்த்தேகத்தத்திற்குச் செல்லும் கெசல்கமுவ ஓயாவில் இரத்தினக்கல் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் நீர் மாசடைவதாக தெரிவித்து இலங்கை மின்சார சபை பொகவந்தலாவை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் 24.09.2015 அன்று வியாழக்கிழமை இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.

பொகவந்தலாவை – கெசல்கமுவ ஓயாவின் செபல்டன் தோட்டப் பகுதியில் 10 ஏக்கர் நிலப்பகுதியில் இந்த இரத்தினக்கல் அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கான அனுமதியை தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகார சபை வழங்கியிருப்பதோடு, சுமார் ஒருவருடத்திற்கான ஒப்பந்தம் அடிப்படையில் அங்கு அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படாத வகையில் இதனை முன்னெடுக்குமாறு மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்திருக்கின்றது.

இந்த நிலையில் மேற்கொள்ளப்பட்டுவரும் அகழ்வு நடவடிக்கைகளினால் ஓயாவின் நீர் மாசடைவதாக கெசல்கமுவ ஓயாவிலிருந்து நீரைப்பெற்றுவரும் லக்ஷபான மின்சார சபை முறைப்பாடு செய்துள்ளது.

குறித்த பகுதிக்கு 24.09.2015 அன்று வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்ட லக்ஷபான மின்சார சபை அதிகாரிகள் அங்கு இடம்பெற்றுவரும் அகழ்வு நடவடிக்கை மற்றும் அதனால் ஏற்படும் நீர்மாசு என்பவற்றை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்தே தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்கு எதிராக பொகவந்தலாவை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமிக்கு நிர்வாண உடலை காட்டிய பொலிஸ் அதிகாரி கைது!!
Next post பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களுக்கு எதிராக நீதிகேட்டு வீதிக்கிறங்கிய மாற்றுத்திறனாளிகள்!!