இராக்கில் ஷியா முஸ்லிம்கள் 24 பேர் கடத்திக் கொலை

Read Time:1 Minute, 36 Second

Irak1.jpgஇராக்கில் ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த 24 பேர் கடத்திக் கொலை செய்யப்பட்டனர். இராக் வந்துள்ள அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் டொனால்டு ரம்ஸ்பீல்டு பாதுகாப்பு நிலவரம் குறித்து இராக் பிரதமர் நூரி அல்-மாலிக்கியுடன் பேச்சு நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், இந்தப் படுகொலை நடந்துள்ளது.

இராக்கில் சமீப காலமாக ஷியா, சன்னி முஸ்லிம் பிரிவுகளுக்கு இடையில் மோதல் அதிகரித்து வரும் நிலையில், இராக்கின் முக்தாதியா நகரில் இருந்து ஷியா பிரிவைச் சேர்ந்த 26 பேர் புதன்கிழமை கடத்திச் செல்லப்பட்டனர்.

அவர்களில் 24 பேர் கொலை செய்யப்பட்டு, அவர்களது சடலங்கள் அருகில் உள்ள சீஹம் என்ற கிராமத்தில் தோட்டங்களில் வீசப்பட்டுக் கிடந்தன. தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ராணுவத்தினர் அந்த சடலங்களைக் கண்டனர். மற்ற இருவரது கதி என்ன என்பது தெரியவில்லை.

கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள், அங்குள்ள குவாரிகளில் தொழிலாளர்களாகவும், டிரைவர்களாகவும் பணியாற்றி வந்த ஹர்குஷ் பழங்குடி ஷியா முஸ்லிம்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கூட்டுப்படை தாக்குதலில் 19 தலிபான்கள் சாவு
Next post விமானத்தில் வந்த எத்தியோப்பிய நாட்டு ராஜநாகம்!