நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூடு – எவரும் கைதுசெய்யப்படவில்லை!!

Read Time:1 Minute, 45 Second

1453481665Untitled-1கடுவலை நீதிமன்றத்தின் முன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரு சந்தேகநபர்கள் தப்பி ஓடியமை தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

நேற்று நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்ற வேளை, அங்கிருந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளன.

எந்தவொரு வகையிலேனும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இதனுடன் தொடர்பு இருப்பதாக உறுதிசெய்யப்பட்டால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன புஸ்பகுமார குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த துப்பாக்கிப் சூட்டில் காயமடைந்த சந்தேகநபரான அருண தமித் உதயங்ஷ தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவரது நிலைமை தற்போது ஆபத்தானதாக இல்லை என வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொடதெனியா சிறுமி வழக்கு – அடுத்தது என்ன..?
Next post ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுக!!