கொடதெனியா சிறுமி வழக்கு – அடுத்தது என்ன..?

Read Time:1 Minute, 45 Second

1727099348Untitled-1கொடதெனியா பகுதியில் ஐந்து வயது சிறுமி சேயா சதெவ்மியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைதாகியுள்ள பிரதான சந்தேகநபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று இரவு குறித்த நபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரயந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் முன்னதாக கைதுசெய்யப்பட்ட பாடசாலை மாணவன் உள்ளிட்ட இருவர் தொடர்பில், தகவல்களை சமர்ப்பித்ததன் பின்னர், நீதிமன்றத்தின் ஊடாக மற்றைய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்திருந்தமை தொடர்பில் சந்தேகநபர்களுக்கு எதிராக வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்த முடியும் என பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை சம்பவம் தொடர்பில் கைதாகியுள்ள மாணவனுக்கு ஏற்பட்ட அபகீர்த்திக்கு உரிய நஸ்ட ஈடு பெற்றுத் தரப்பட வேண்டும் என அவரது தாயார் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மக்கா – நெரிசலில் சிக்கி 100 பேர் பலி, 390 பேர் காயம்!!
Next post நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூடு – எவரும் கைதுசெய்யப்படவில்லை!!