கொட்டகலையில் மின்சார வேலியில் சிக்கி விவசாயி பரிதாபமாக பலி!!

Read Time:2 Minute, 3 Second

1267216362Untitled-1கொட்டகலை பிரதேசத்தில், மிருகங்களிடம் இருந்து மரக்கறி தோட்டத்தைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (24) வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள-பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டகலை ஹெரின்டன் குடியிருப்புத் தொகுதியில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான எஸ்.தர்மலிங்கம் (வயது 63) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த பகுதியில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் நள்ளிரவில் அதிகரித்திருப்பதால் அச்சத்துடனேயே இரவுப் பொழுதைக் கழித்துவருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் மரக்கறி பயிற்செய்கையை வாழ்வாதாரமான நம்பியிருக்கும் இவர்களுக்கு காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தினால் தோட்டங்களைப் பாதுகாப்பதற்கு மின்சார வேலியைத் தவிர வேறு வழியில்லை என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொட்டகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரண விசாரணைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள – பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வடக்கில் 860 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்!!
Next post தங்கம் கடத்த முற்பட்ட இருவர் கைது!!